கடலின் மத்தியில் ஓர் கிராமம் - அனலைதீவு


கடலின் மத்தியில் ஓர் கிராமம் - அனலைதீவு

அகல்யா பிரான்சிஸ்கிளைன் அகிலன் கதிர்காமர்

யாழ் நகரிலிருந்து அனலை தீவிற்கு புறப்படுவோமாயின் ஊர்காவற்துறைக்கு ஒரு மணித்தியாலம் பஸ்சில் பயணித்து பின் 45 நிமிடங்கள் தனியார் படகில் 50ரூபா பற்று சீட்டுடன் ஏறினால் அங்கு ஆசிரியர்கள்இ அரசாங்க ஊழியர்கள்இ பெற்றோருடன் பிள்ளைகள்இ மூட்டைகளுடன் வர்த்தகர்கள் மற்றும் படகின் மேல் மோட்டார் சைக்கில்களும் லீசிங் வர்த்தகர்களின் பொருட்களும் காணலாம். அவ்வாறே கடலில் பயணிக்கும் போது சிறு சிறு அலைகள் படகினை மெல்ல மோதி படகு ஆடி ஆடி நகர சிறு தீவுகளின் அழகான காட்சிகளை அனுபவிக்கலம். இவ் அழகினை ரசித்தபடி ஜெட்டியை அடைந்தால் அங்கு ஓர் பஸ்சும் பல ஆட்டோக்களும் தீவின் உள் போக்கு வரத்திற்காக காத்திருக்கும்.
புவியியல் ரீதியாக யாழ்ப்பாண மாவட்டத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் தீவுகளில் மிக கூடிய தூரத்திலிருக்கின்றது நெடுந்தீவு அதற்கடுத்ததாக நையினாதீவும் அனலைதீவும் காணப்படுகின்றது. தீவுகளில் விவசாயம் செய்வதற்கு நன்னீர் கிடைப்பது மிகவும் அருமையாக இருந்த போதும் அனலைதீவில் விவசாயத்திற்கு ஏற்ற மண் மற்றும் நீர் வளங்கள் போதியளவு இருக்கின்றது. கடற்தொழில்இ விவசாயம் என வடமாகாணத்தின் இரு முக்கிய பொருளாதார துறைகளும்; அனலைதீவில் இயங்குகின்றது. பனைவளங்கள் மிகுந்த இந்த தீவல் பனை மூலப்பொருட்கள் சம்மந்தப்பட்ட தொழில்களை செய்வோரும் வசித்து வருகின்றனர்.
கடற்தொழிலும் விவசாயமும்
இந்தியா மாநிலத்திற்கு அண்மையிலலிருக்கும் தீவுப்பகுதிகளில்  ஒன்றான அனலைதீவும் இந்தியா இழுவைப்படகுகளின் அத்து மீறல்களால் அதீத பாதிப்பை அடைந்துள்ளது. கடல் வளங்கள் அழிந்ததன் காரணமாக மீனின் உற்பத்தி குறைந்துள்ளது. இழுவைப்படகுகள் வரும் நாட்களில் கடலிற்கு போகாமல் இருப்பதனால் இக்கிராமத்தினுடைய தொழிலாளர்களின் வருமானம்; பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தல் இவர்களுக்கு பாரிய பிரச்சனை. உள்ள10ரில் மாத்திரமே சந்தைப்படுத்த முடிகின்றது. வேறு இடங்களுக்கு விநியோகிப்பதாயின்இ  படகுகளிலே 11 மணிக்கு பின்னர் யாழ் கொட்டடி சந்தைக்கு கொண்டு செல்கின்றார்கள் அதற்குள் மீன்கள் பழுதடைந்து விடலாம். ஏனெனில் மீன்களை சேமித்து வைக்க குளிரூட்டிவசதிகள் தேவைப்படுகின்றன்.
வடமாகாணத்தின் விவசாயிகள் காலநிலை வரட்சி காரணமாக அறுபடையினை பெறமுடியாது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளார்கள். இத் தீவு மக்களும் மழை மற்றும் கிணற்றினை நம்பி விவசாயம் செய்வதனால் இதே பிரச்சனையை சந்திக்கின்றார்கள். இங்கு புகையிலை வெங்காயம் மிளகாய் நெல் போன்ற பயிர்கள் ஒரு போகம் மாத்திரம் செய்யப்படுகின்றன. 1960வதுகளில் சின்ன சிங்கப்பூர் என இக்கிராமத்தினை அழைக்கும் அளவில் விவசாயம் மிகவும் சிறபுற்று பொருளாதார முன்னேற்றத்தினை அடைந்திருந்தது.  தென் இலங்கைக்கு கூட பணப்பயிர்களை இங்கிருந்து ஏற்றுமதி செய்தார்கள். ஆனால் இன்று அறுபடை பெற முடியாது பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கின்றார்கள்.
சமூக பொருளாதார சவால்கள்
பெண்களின் நிலையினை நோக்குகையில் இவர்களில் சிலர் கூலிவேலைக்கு செல்கின்றார்கள். சில பெண்கள் தையல் பனைவேலைகள் என பல வேலைகள் பழகியுள்ள்ள போதும் இவ் வேலைகளை முன்னெடுக்க உள்கட்டுமான வசதிகள் குறைவாக இருக்கின்றன. ஒரு சில பெண்கள் வீட்டில் வைத்து தையல் தொழிலை புரிகிறார்கள் மற்றும் சிலர்  வலைகளை தைக்கின்றார்கள்.
இத்தீவின் மூன்று பாடசலைகளில் இரண்டு பாடசாலைகள் தரம் 1-5 வரையானவை மற்ற பாடசாலை தரம் 6-13வரை காணப்படுகின்றது கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னரே தரம்13 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் கலைப்பிரிவு மாத்திரமே தற்போது கற்பிக்கப்பட்டுகின்றது. ஏனைய துறையினை பயில்கின்ற மாணவர்கள் ஊர்காவற்துறைக்கு செல்ல வேண்டியுள்ளது. தரம் 11 6வருடங்களுககு முன்; ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பாடசாலைகளுக்கு வேறு இடங்களிலிருந்து ஆசிரியர்கள் பணியாற்றுகின்ற போது போக்குவரத்து பிரச்சனையை எதிர் கொள்வதால் பொரும்பாலான ஆசிரியர்கள் இங்கு சென்று கல்வி கற்பிப்பதனை விரும்புவதில்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் ஏதும் இல்லாததால் பிள்ளைகளை பகுதி நேர வகுப்பிற்கு அனுப்ப முடியவில்லை என இக் கிராமத்தவர்கள் கூறுகிறார்கள். உயர் கல்வியினை பயில ஊர்காவற்துறைக்கு செல்ல வேண்டியிருப்பதால் பாடசாலையிலிருந்து சில மாணவர்கள் இடைவிலகி கொள்கிறார்கள்.
இங்கிருக்கும்  வைத்தியசாலையில் அதிக வசதி வாய்ப்புக்கள் இல்லை. கர்ப்பிணிதாய்மார் மற்றும் சிறுபிள்ளைகளுக்கு மாதாந்தம் போடும் ஊசிகளுக்கு ஊர்காவற்துறைக்கு செல்ல வேண்டியிருக்கின்றது. வைத்தியர்கள் இங்கு திங்கள் முதல் வெள்ளி வரை பணி புரிகின்றனர். சனிஇ ஞாயிறுகளில் நோய்வாய் படில் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையிலுள்ளார்கள். இரவு நேரத்தில் அவசர சிகிச்சை பிரசவம் போன்றவற்றிற்கு செல்வதாயின் தனியார்படகு அல்லது நேவியின் உதவியுடனே ஊர்காவற்துறை வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது தனியார் படகுகளில் செல்வதாயின் 2500ரூபா.
இங்கு கொண்டுவரப்படும் பொருட்கள் யாழ் நகரிலிருந்து தனியார் படகுகளில் வருவதனால் பொருட்களின் விலை 30 வீதம் அதிகமாகும். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களினை யாழில் விற்பனை செய்வதற்கு போக்குவரத்து செலவுகள் பெரும் சவாலாக அமைகின்றது. மற்றும் மின்சார வசதிகள் சில இடங்களில் மாத்திரம் விஸ்திரிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு மொத்தமாக வடமாகாணத்தின் வேறு கிராமங்களின் உட்கட்டுமானங்களிலும் பார்க்க இத்தீவில் போக்குவரத்து வசதிகள் பெரியதொரு பிரச்சனையாகவுள்ளது. ஆனால் அனலைதீவில்; வங்கிகள் இல்லாவிட்டாலும் வடமாகாணத்தின் அண்மைக்கால நிதிமயமாக்கலின் தாக்கம் இங்குள்ளது. வங்கிகளிடமிருந்து கடன்இ நகையடைவுஇ பெண்கள் மத்தியிலான சிக்கன கடன் மற்றும் லீசிங் நுகர்வுகளினால் கடன்களில் மக்கள் மூழ்கியிருக்கின்றார்கள்.
இக்கிராமத்தில் பொலிஸ் இல்லை. சில சமூக வன்முறைகள் பிரச்சனைகள் தோன்றும் போது கிராமசேவகரே அதை தீர்த்து வைக்க வேண்டிய நிலமையிலுள்ளார். ஆனால் யுத்தகாலத்திலிருந்து இன்று வரை நேவியின் அழுத்தங்கள் இக் கிராமத்திலிருப்பதாக கூறப்படுகின்றது. மற்றும்  இங்கு பல நோக்கு கூட்டுறவு சங்கம் இயங்குகின்றதுஇ ஆனால் அதனுடைய செயற்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றது.
கடந்த தசாப்தங்களாக பேரின் பாதிப்பு உட்கட்டுமானஇ பிரச்சனைகள்இ இடப்பெயர்வு  மற்றும் புலப்பெயர்வுகளால் அனலைதீவினுடைய சனத்தொகை 3000குடும்பங்களிலிருந்து தற்போது 600குடும்பங்களாக குறைந்துள்ளது. இவ்வாறு  வடமாகாணத்தில் பல விளிம்;புநிலை கிராமங்கள் இருந்த போதும் அனலைதீவு புவியியல் ரீதியாகவும்இ புலப்பெயர்வுஇ இடப்பெயர்வுஇ பொருட்களின் விலை; போன்ற காரணங்களினால்; மிகவும் பின்னோக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கிராமப்புற வாழ்க்கையை மேம்படுத்தல்
இலங்கையில் அண்மைக்காலத்தில் நகரமயமாக்கல் மற்றும் நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்தே வருகின்றது. இந்நிலையில் கிராமப்புற வாழ்கையின் எதிர்காலம் மற்றும் உள்ளாற்றல் என்னவென்ற கேள்வி எழும்புகின்றன.
அனலைதீவு போன்று புவியியல் மற்றும் சமூகரீதியாக விளிம்பு நிலையில்லிருக்கும் கிராமத்தின் மேம்பாடு தற்போது அவசியமாக விவாதிக்கப்பட வேண்டும். ஏனெனில் நகரத்திற்கு செல்வோரில் ஒரு சிலருக்கு தான் அங்கு வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றது. மற்றும் கிராமங்களில் மிஞ்சியிருப்போர் சமூக புறந்தள்ளல்களினால்; ஒதுக்கப்படாமல் அவர்களுடைய சமூக பொருளாதார வளர்ச்சிக்கான தீர்வுகளை தமிழ் புத்திஜீவிகளஇ; வடமாகாணசபை மற்றும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இந்த கட்டத்தில் அனலைதீவிற்கு மேற்குறித்தவாறு பலவிதமான உட்கட்டுமானங்கள் மற்றும் அரசசேவைகள் தேவைப்படுகின்றன. இதற்குள் கல்விஇ சுகாதாரம்இ பாதுகாப்புஇ போக்குவரத்து போன்ற உட்கட்டுமான தேவைகள் குறிப்பிடத்தக்கவை. ஆனால் இதற்கு மேலாக இத் தீவினை மேம்படுத்துவதற்கு உள்ளுர் வாய்ப்புக்களுமே மிக முக்கியமான சவாலாக அமைகின்றன. இங்கு கடற்தொழில் விவசாயம் மற்றும் பனைவேலைகள் அத்துடன் பெண்களுடைய வேலைவாய்ப்புகளுக்கு அரசாங்க முதலீடுகள் தேவையாக இருக்கின்றது. கடற்தொழிலை பொறுத்தவரையில் இந்திய இழுவைப்படகு பிரச்சனையை தீர்ப்பது அவசியம். விவசாயத்தின் வளர்ச்சிக்கு மாற்று பயிர்களஇ; நெல்லின் உற்பத்தி போன்ற முயற்சிகளுக்கு உதவிகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றது. அத்துடன் பனைஉற்பத்தி மற்றும் பெண்களின் தையல் வேலைகளுக்கு கைத் தொழில் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
இத்தீவின் முக்கியத்தவர்கள் கூறுகையிலஇ; போக்குவரத்து உட்கட்டுமானங்கள; விவசாயத்திற்கான இயந்திரங்கள் மற்றும் உற்பத்திக்கான மில் என்பன இந்த தீவின் பொருளாதாரத்தை வளர்க்க உதவும் என்கின்றார்கள். சமூக பொருளாதார வளர்ச்சியை அணுகும் போது ஒரு கிராமத்தின் மக்களுடைய கூட்டு செயற்பாட்டு அபிவிருத்தியை சாத்தியமாக்கும். இங்கு ஏற்கனவே இயங்கி வரும் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தை பலப்படுத்துதல்இ மேல் வசதிகளை கூட்டுறவினூடாக இயங்க வைத்தல் மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை அரசாங்கதுறை அல்லது கூட்டுறவு முயற்சியினால் முன்னெடுப்பதன் ஊடாக உற்பத்தி மற்றும் விநியோகித்தலில் அந்ந சமூகத்திற்கு பல முன்னேற்றங்கள் வரலாம். இவ்வாறான கிராமப்புற மேம்பாட்டினை வடமாகாண சபை முக்கியப்படுத்தல் அவசியமாகும்.

2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற சாதிய ஒடுக்கு முறை


2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற சாதிய ஒடுக்கு முறை

                               வன்னி  மக்கள் இறுதி யுத்ததின் போது பல உயிர்கள் சொத்துக்களை இழந்து இருப்பதற்கு இடமின்றி பல இடங்களில் இடம் பெயர்ந்து இறுதியில் முகாம்களில் வசித்து  தற்போது தமது சொந்த இடங்களில் வசித்து வருகிறார்கள். எம் மக்கள் எத்தனை இழப்புக்கள் அழிவுகளை சந்தித்த போதும் சாதிய உணர்வை மட்டும் என்றும் கைவிட மாட்டார்கள்.
                             நான்; அண்மையில் கற்சிலை மடு என்னும் கிராமத்திற்கு சென்று அவர்களுடன் பல விடையங்கள் தொடர்பாக  உரையாடினேன் அப்போது பாடசாலை ஒன்றில் சாதிரீதியாக இடம் பெற்ற ஒடுக்கு முறை தொடர்பாக ஒரு பெண் கூறுகையில்
                               2013ம் ஆண்டு ஜப்பசி மாதம் கற்;சிலைமடு பாடசாலை ஒன்றில் வாணிவிலா கடைசிநாளில் ஒரு கிராமத்திலுள்ள பிள்ளைகள் வீட்டிவிருந்து சாப்பாட்டு பொருட்கள் செய்து கொண்டு சென்று இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் இவற்றை வாங்கி சாப்பிடவில்லை ஏனெனில் ஆசிரியர் சாப்பிட தொடங்கும் போது அப்பாடசாலையில் கல்விபயிலும் சில உயர்சாதி மாணவர்கள் ஆசிரியருக்கு கூறினார்கள் இவ்வுணவு செய்த மாணவர்கள் குறைந்த சாதி மாணவர்கள் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று கூறியதும் அந்த ஆசிரியர்களும் வாங்கி உண்ணவில்லை உயர்சாதி பிள்ளைகளும் சாப்பிடவில்லை இதனால் செய்து கொண்டு போன பிள்ளைகள் தாம் ஏன் குறைந்த சாதியில் பிறந்தோம் என்று கவலைபட்டார்கள்;
                                       கடையிலை மட்டும்; சாப்பாடு வாங்கி சாப்பிடும் போது என்ன சாதி என்று கேட்டா வாங்கி சாப்பிடுகிறார்கள் ஆனால் ஊருக்க மட்டும் சாதி குறைந்தவர்களின் வீடுகளில் வாங்கி சாப்பிடமாட்டார்கள். ஏனென்றால் ஊருக்க தான் தெரியும் அவர் அவர் என்ன சாதி என்று அவ் மாணவர்கள் கூறி கவலையடைந்தார்கள் எவ்வாறு நாங்கள் கல்வி கற்று முன்னேற்றம் அடைந்தாலும் சாதிய ஒடுக்கு முறை என்பது எம்மை விட்டு இன்றும் நீங்கவில்லை என்று அவ் மாணவர்கள் கூறினார்கள்.
                                ஆசிரியர் என்பவர்கள் பெரிய அறிவாளிகள் என நம்பி எம் பிள்ளைகளை எத்தனையோ மணித்தியாலங்கள் அவர்களிடம் கல்வி கற்க அனுப்புகின்றோம் ஆனால் பல ஆசிரியர்கள்; படித்த முட்டாள்களாக தான் விளங்குகிறார்கள்  அப் பிள்ளைகளுக்கு அவ்வாறு செய்யக்கூடாது என்று கூறுவதந்கு மாறாக தாங்களும் சாதிய முறையை கடைப்பிடிப்பவர்களாக விளங்குகிறார்கள் இவர்களின் படிப்புக்கள் எல்லாம் பட்டம் பதவிக்கும் மாத்திரமே காணப்படுகின்றது.
                                    எம்; மக்கள் எத்தனை பிரச்சனைகளை சந்தித்து உயிர்களை இழந்தாலும் சாதிய உணர்வினை மட்டும் மறக்கமாட்டார்கள்.அத்துடன் தமது பிள்ளைகளுக்கு போதிய கல்லியறிவை ஊட்ட மறந்தாலும் சாதிய உணர்வினை மட்டும் சிறுபராயத்திலிருந்து ஊட்ட மறக்க மாட்டார்கள்

விளிம்பு நிலையிலுள்ள ஊரி கிராமத்து மக்களின் நிலை

விளிம்பு நிலையிலுள்ள ஊரி கிராமத்து மக்களின் நிலை

யாழ்ப்பாணத்தில் விளிம்புநிலையிலிருக்கும் கிராமங்களில் ஊரி கிராமமும் ஒன்றாகும் இக்கிராமம் காரைநகர் பிரதேசத்தில் பாலாவோடை கிராமத்திற்கு அண்மையில் j/44 கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள வறிய கிராமம். இங்கு 316 குடுப்பங்கள் வசிக்கிறார்கள.; இவ் மக்கள் 1987- 1995 ம் ஆண்டு காலப்பகுதிகயில் பல இடப் பெயர்வுகலை சந்தித்து பல இடங்களுக்கும் இடம் பெயர்ந்து சென்றார்கள் தற்போது இக்கிராமத்திலே நிரந்தரமாக வசித்து வருகிறார்கள். இங்குள்ள மக்கள் காலநிலைக்கு ஏற்ப கூட்டுவலை மீன்; பிடி தொழில் சீவல் தொழில் என 2 தொழில் புரிந்து வருகிறார்கள். இக்கிராமத்திலுள்ள பெண்கள் ஆண்களோடு இணைந்து கடற்தொழில் புரிகிறார்கள். இவர்களுக்கு அருகில் சிறிய கடல் காணப்படுவதால் மீன்கள் பிடிக்க முடிவதில்லை நண்டு இறால் போன்றவை தான் இவர்களால் பிடிக்க முடிகின்றது. இதனால் அதிகளவில் இலாபத்தினை பெற முடியவில்லை இவர்களினால் 300 ரூபாவுக்குள்ளே நாளாந்த வருமானமாக உழைக்க முடிகின்றது.
இக்கிராமத்திலுள்ள மக்கள் அதிகம் தரம் 7 11வரையே படித்துள்ளார்கள் இவர்கள் கல்வி கற்பதற்கேற்ப பொருளாதார சூழ்நிலைகள் அமையவில்லை. தற்போது இரண்டு  பிள்ளைகள் தான் பல்கலைக்கழகம் சென்றுள்ளார்கள். பொருளாதார வசதி மிகவும் குறைந்துள்ளதால் இவர்கள் தனியார் நிலையங்களுக்கு சென்று கல்வி கற்க முடியவில்லை. தற்போது போதகர் கமல் தலைமையில் ரியூசன் ஒன்றினை  நடாத்தி வருகிறார்கள் இலவசமாக. பல ஆசிரியர்களும் இங்கு வந்து கல்வி கற்பிக்கிறார்கள். வெளிநாட்டில் உள்ள சிலரின் ஒத்துழைப்புடன் இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்படுகின்றது.
இங்குள்ள மக்கள் பல பிரச்சனைகளை எதிர் கொள்கிறார்கள் அதில் ஒன்று சாதி ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும் பாண்மை மக்களினால் பேச விருப்பப் பாடாத ஒன்றாக சாதி விளங்குகின்றது. இப்பிரச்சனை எங்கள் சமூகத்தில் இல்லை என்று கூறிக் கொண்டு சாதி பார்க்கும் அறிவாளிகள் தான் எம்  சமூகத்தில் உள்ளார்கள். இங்கு சாதியின்னையா? அல்லது சாதி மறைப்பா? என்ற நிலைதான் யாழ்கிராமங்களில் காணப்படுகின்றது. அந்த வகையில் தான் இக்கிராம மக்களும் உள்ளார்கள். இக்கிராம மக்கள் சாதிய கட்டமைப்பில் மிகவும் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என யாழ்ப்பாணத்தில் உயர்சாதியினர் என்னு தம்மை கூறிக் கொள்பவர்களால் அழைக்கப்படுகின்றார்கள். இக்கிராமத்திற்கு அண்மையில் பாலாவோடை என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசிப்பவர்கள் வெள்ளாளர் என்று தம்மை கூறிக் கொள்கிறார்கள்;. இவர்கள் பல சாதிய ஒடுக்கு முறைகளினை ஊரி கிராம மக்கள் மேல் புரிகிறார்கள்.
யாழ்சமூகத்தில் சாதிக்கொரு கோவில்கள் என ஆரம்ப காலங்களிலிருந்து இன்று வரை இருந்து வருகின்றது இந்த வகையில் தான் இக்கிராமத்திலும் அதே நிலமைதான் காணப்படுகின்றது. 1990ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஊரிகிராம மக்கள் பாலாவோடை கிராமத்திலுளள்ள அம்மன் கோவிலினுள் தேர் திரு விழா ஒன்றுக்கு சென்று அத் தேரை தொட்டு விட்டார்கள் என்பதற்காக தம்மை உயர்சாதிஎன கூறிக் கொள்ளும் பாலாவோடை மக்கள் அத் தேரினையே எரித்தார்கள்.
1996ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஊரிகிராம மக்கள் பாலோவோடை கிராமத்தினுள் நுழைந்து விட்டார்கள் என்பதற்காக இரு கிராமத்தவர்களுக்கிடையிலும் பாரிய சண்டை ஏற்பட்டது இதனால் இன்று வரை இரண்டு கிராம மக்களுக்கும் எந்த வித தொடர்பாடல்களும் அற்ற வகையில் வசிக்கிறார்கள். இருகிராம மக்களுக்கும் என ஒவ்வொரு பொதுக்கிணறுகள் இருக்கின்றது. பாலோவோடை கிராமத்து மக்கள் ஊரிகிராமத்தவர்களின் கிணறுகளில் ஒரு போதும் தண்ணீர் அள்ள மாட்டார்கள். மற்றும் ஊரி கிராமத்து மக்களை தங்களது கிணறுகளில் தண்ணீர் அள்ள ஒருபோதும் இவர்கள் விடமாட்டார்கள்.
இக்கிராம மக்கள் தண்ணீர் பிரச்சனைகளினையும் எதிர் கொள்கின்றனர் ஆரம்ப காலங்களில் நல்ல தண்ணீர் ஊரி கிராமத்தில் காணப்பட்டது 1995ம் ஆண்டு இடப்பெயர்வின் பின் இக்கிராமத்தில் உள்ள கிணற்று தண்ணீர்கள் குடிக்க முடியா நிலை காணப்பட்டது. ஏனெனில் தண்ணீர் உப்புத் தண்ணீராக காணப்பட்டது. அதனால் இவர்கள் இன்று சுண்ணாகத்திலிருந்து கரைநகர் அபிவிருத்தி சங்கத்தினால் விநியோகிக்கப்படும் தண்ணீரினை பணம் கொடுத்து வாங்குகின்றார்கள்.
இக்கிராமத்திலுள்ள தரம் 1-5 வரையான மாணவர்கள் அமெரிக்கன்மிசன் தமிழ்கலவன் பாடசாலையில் கல்வி பயில்கிறார்கள். மேலதிக தமது கல்வியினை வலந்தன் சந்தியில் அமைந்திருக்கும் தியாகராஜா மகாவித்தியாலைய பாடசாலையில் 6-யுஃடு வரை கற்று கொள்கின்றனர். தியாகராஜா மகாவித்தியாலைய கல்லூரி இக்கிராமத்திலிருந்து 6மஅ தூரத்தில் அமைந்துள்ளது. இவர்கள்; பாடசாலைக்கு நடந்து செல்வதனால் பிந்தி பாடசாலை செல்ல வேண்டிய நிலமை காணப்படுகின்றது. எனவே இவர்கள் பாடசாலை நேரத்திற்கு செல்வதற்கு இக்கிராமத்தில் தற்போது ஊழியம் செய்கின்ற போதகர் கமல் சீரிபி பஸ்சினை பிள்ளைகளுக்கு ஒழுங்கு செய்து கொடுத்துள்ளார். 100மாணவர்கள் இங்;கிருந்து இப்பாடசாலைக்கு பஸ்சில் சென்று வருகின்றார்கள். ஆரம்பத்தில் இக்கிராமத்திற்கு பஸ் வந்த போது பல பிரச்சனைகளினை இவர்கள் எதிர்கொண்டார்கள் அதாவது பஸ்சினை இக்கிராமத்திற்கு விடமாட்டோம் என்று பிரச்சனைப்பட்டார்கள் பின்னர் பஸ்சை ஒழுங்கான நேரத்திற்கு பிள்ளைகளுக்கு விடவில்லை. மற்றும் பாலோவோடை பொது மக்களினையும் பஸ்ஸில் ஏற்றி கொண்டு சென்றார்கள் இதனால் பாடசாலை பிள்ளைகள் பஸ்சில் ஏற முடியேல நிலமை காணப்பட்டது பின்னர் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தற்போது பாடசாலை பிள்ளைகள் மட்டும் பஸ்சில் செல்ல ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பாலோவோடை கிராம மக்களுக்கு இங்கு பஸ் செல்வது விருப்பமில்hமையால் 2012ம் ஆண்டு காலப்பகுதியில் பஸ்சினையே கொளுத்தும் அளவிற்கு சென்றார்கள்.  இப் பாலாவோடைகிராமத்தவர்கள் சாதி வெறி பிடித்த முட்டாள்களாக விளங்குகின்றார்கள்.
தியாகராஜா பாடசாலைக்கு இக் கிராமத்திலிருந்து பாடசாலை செல்லும் பல பிள்ளைகள் பாலாவோடை கிராமத்து ஆசிரியர்களினாலும் மாணவர்களினாலும் பல பிரச்சனைகளினை எதிர் கொள்கிறார்கள். ஆசிரியர்கள் இவர்களை பெயர் சொல்லி அழைப்பதில்லை அதிகளவில் இவ் மாணவர்களினை பேசிக் கொள்கிறார்கள். மற்றும் இவர்களினை கவனம் எடுத்து கல்வி கற்பிப்பதில்லை வகுப்பின் பிற்பகுதியிலே இவர்களினை இருத்தி கொள்கிறார்கள். பாலாவோடை மாணவர்களும் இவர்களுடன் இணைந்து கதைத்து கொள்வதில்லை அவ்வாறு கதைத்த கொண்டாலும் பாடசாலைகில் மட்டுமே வீட்டீற்கு வந்தவுடன் இவர்களினை யார் என்றே தெரியாதமாதிரி நடந்து கொள்கிறார்கள்.
இக்கிராமத்திலுள்ள பிள்ளைகள்பெரும் பாலும் இளவயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இங்குள்ள பெண்கள் மீன்பிடி தொழிலுக்க ஆண்களுடன் இணையாக செல்கின்றார்கள் இதனை தவிர வேறு சுய தொழில்கள் செய்ய வில்லை சிலர்; தையல் பயிற்சியினை படித்துள்ளார்கள் ஆனால் தையல் மிசின் இல்லாததால் தையல் தொழில் செய்ய முடியவில்லை. இக்கிராமத்து பெண்கள் வேலை வாய்ப்புக்கள் அற்ற நிலையில் வீட்டு வேலைகளினை மட்டும் புரிந்து கொண்டு வாழ்கிறார்கள்.
இக்கிராமத்து மக்கள் சாதி பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளினை எதிர் நோக்கி வருகிறார்கள். இவர்களின் இவ் நிலமை தொடர்பாக எந்த வித முன்னேற்ற செயற்பாடுகளும் யாரினாலும் இது வரை மேற் கொள்ளப்படவில்லை இவ்வாறான பல கிராமங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவே பலர் அறியாமல் வாழ்கிறார்கள் இக்கிராமத்திலுள்ள மக்களில் ஒரு சில மக்கள் தனித்துவமாக முன்னேறிய போதும் இன்றும் அதிகமான மக்கள் சாதி பொருளாதார ரீதியாக சுரண்டப்பட்டு பின்னோக்கிய நிலையில் வாழ்கிறார்கள். ஒடுக்கப்படும் இச் சமூக மக்கள் எப்பொழுதுமே மையத்தை நோக்கி நகர முடியாது விளிம்பு நிலையிலே இருப்பதனை கண்டு கொள்ளலாம்.

அகல்யா. பிரான்சிஸ்கிளைன்

ஓர் பெண்ணின் கதறல்

ஓர் பெண்ணின் கதறல்

நான் பல சவால்களுக்கு மத்தியிலும் மூன்று பிள்ளைகள் கணவனுடன்
மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தேன்  ஆரம்ப நாட்களில் பின்னர்- திடீரென
யுத்தம் தலைதூக்கியது வீட்டிற்கு ஒருவன் போராட வேண்டும் என பலர்
பதினேழு வயதுடைய  என் ஆண் மகனை போராட கூட்டிச் செல்ல வந்தார்கள்
எவ்வளவோ நான் போராடியும் விடாமல் என் பிள்ளையை கொண்டு சென்று விட்டார்கள்
போர் உக்கிரமடைந்ததால் பல இடங்களிலும் இடம் பெயர்ந்து சென்றோம்
ஏன் குடும்பம் பசியால் துடித்தது எங்கோ ஓர் இடத்தில் கஞ்சி கொடுப்பதாக அறிந்த
 கணவன கஞ்சி வாங்கி வருவதாக காலை ஆறு மணிககு புறப்பட்டான் - ஆனால்
மாலை ஆறு மணியாகியும் அவர் வீடுவரவில்லையே என பதறி அடித்து கொண்டு
ஓடினேன் அவ்விடம அங்கே; கொடிய அரக்கன் வீசிய செல் உடலை துளைத்தது
இரத்த வெள்ளத்தில் உயிர் நாடிகள் அசைவற்று கிடந்தான் என் மன்னவன்
கதறினேன் அழுது புரண்டேன் ஆனால் என்னருகில் எவரும் வரவில்லை

சிலர் இராணுவம் இவ்விடத்திற்குள் வந்து விட்டார்கள் என்று கூறிக்கொண்டு ஓடுகிறார்கள்
கணவனின் உடலைஅவ்விடத்திலே விட்டு விட்டு என் பிள்ளைகளை நோக்கி ஓடினேன்
அங்கே ஆறு வயதுடைய என் மகள் அழுது கொண்டு நின்றால் எங்கே அண்ணன் என்றேன்
அவளோ துப்பாக்கியுடன் வந்த ஜவர் அண்ணனை பிடித்து சென்று விட்டார்கள் என்றாள்
நாட்டிற்காக போரட சென்ற மகனும் இராணுவம் பிடித்த என் மகனும் திரும்ப வருவார்கள்
என்ற ஏக்கத்துடன் என் மகளுடன் முகாமில் பல இன்னல்களுக்குள்  வாழ்ந்தேன்
ஓர் நாள் போராட சென்ற என் மகன் முள்ளிவாய்க்காளிலே இறந்து விட்டதாககூறினார் ஒருவர்
அழுது கொண்டு இருந்த போது சிலர் காணாமல் போனோர் தொடர்பாகவிபரம் எடுப்பதாக கூறினார்கள்
உடனே என் அழுகையை நிறுத்தி விட்டு அவ்விடம் சென்று இராணுவம் பிடித்து சென்றவன்
தொடர்பாக பதிவுகளை மேற் கொண்டேன் அவனாவது என்னிடம் வருவான் என்ற ஏக்கத்துடன்

பின்னர் முகாமை விட்டு என் சொந்த இடம் சென்றேன் அங்கு என் வீடு இருந்ததுக்கான
எவ் டையாளங்களுமின்றி நிலம் வெறித்தோடிப்போய் பாலைவனமாக காட்சி தந்தது
அங்கே சிறு குடிசை அமைத்து நானும் என் மகளும் வாழ்ந்து வருகிறோம்
ஊடகங்கள் பல என்னிடம் வந்து பேட்டிகள் எடுத்து செல்கின்றனகாணாமல் போனோர் தொடர்பாக
சிலர் தமிழ் தேசியம் பேசிக் கொண்டு வருகிறார்கள் என்னிடம் ஜெனீவாவிலிருந்து வருகிறார்கள்
நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வாங்கோ உங்கள் மகன் தொடர்பாக கதையுங்கள் என்பார்கள்
வந்தவர்கள் போய்விட்டால் இவர்கள் என் வீட்டு வாசல் கூட வர மாட்டார்கள்
இவர்கள் எல்லோருக்கும் என் வேதனைகள் செய்தியாகமட்டும் தெரிகின்றது போல
நாட்கள் பல நகர்ந்து செல்கின்றனஆனால் காணாமல் போன என் மகனோ இன்று வரை வரவில்லை
ஏறாத கோவில் படிகள் எல்லாம் ஏறி பிராத்திக்கிறேன் ஆனால் சாமிக்கோ
இந்த ஏழையின் வேண்டுதல்கள் ஒன்றும் கேட்கவில்லை போல் 

இத்தனை வலிகளோடும் நானும் என் பெண்ணும் வாழ எத்தனிக்கின்ற போது
கூலி வேலைக்கு சென்றேன் ஒரு நேர சாப்பட்டிற்காவது பணம் கிடைக்கும் என்று
அங்கே நான் பெண் என்றதால் எனக்கு கூலி குறைவாகக தருகிறான் என் முதலாளி
திருமண வைபவம் ஒன்றிற்கு சென்றேன் அங்கே விதவை என்ற பட்டம் என் மேல் 
சமூகம் சுமத்தி அவ் நிகழ்விலிருந்து புறந்கள்ளுகின்றது
ஆண் நண்பர்கள் பலர் என் வீட்டிற்கு வந்து கதைத்து சென்ற போது 
ஏன்னை சுற்றியிருப்பவர்களோ என்னைவிபச்சாரி என்றுவிளம்பரப்படுத்துகிறார்கள்
தனியே நான் வெளியே செல்லும் போது இராணுவம் முதல் என் சமூக ஆண்கள் வரை
என் முதலாளி வரை பலர் எனக்கு பாலியல் அச்சுறுத்தல்கள் தருகிறார்கள்
தனியே வீட்டிலிருக்கும் என் 10 வயது சிறுமியை கூட காம வேட்கை கொண்ட ஆண்கள் 
என்ன பன்னுவார்களோ என்ற ஏக்கத்துடன்
வேலைக்கு செல்கிறேன்;ஒவ்வொரு நாட்களும்

வீதியில் தெரிந்த ஆண்களுடன் நின்று கதைத்தால் என்னை வேசை என்கிறார்கள்
என் பிள்ளைகள் கணவன் சொத்து இழந்தும் உயிருடன் இருக்கும் பிள்ளைக்காக
வாழ வேண்டும் என்று நான முயற்சித்த போது இவ் ஆணாதிக்கசமூகம் 
நான் பெண் என்றதால் என்னை ஒடுக்குகின்றது பல வழிகளிலும்;
எல்லேரரும் சர்வதேச பெண்கள் தினத்தைகொண்டாடுகிறார்கள்.- ஆனால்
எங்கே ஓர் பெண்ணிற்குமுழு விடுதலை கிடைத்தது இவ் ஆணாதிக்க சமூகத்திலிருந்து??


நகரமயமாக்கல்

இலங்கையில் அண்மைக்காலத்தில் நகரமயமாக்கல் மற்றும் நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்தே வருகின்றது. இந்நிலையில் கிராமப்புற வாழ்கையின் எதிர்காலம் மற்றும் உள்ளாற்றல் என்னவென்ற கேள்வி எழும்புகின்றன.

அருமை கதைகள் என்னும் அடிமைக்கதைகள்

அருமை கதைகள் என்னும் அடிமைக்கதைகள் 

புராணங்கள் இலக்கியங்கள் நாடகங்கள் என பலவும்
எம் கதைகளை அருமைக்கதைகள் என கூறி 
அடிமைக்கதைகளாகவும் வியாபாரகதைகளாகவும் ஆக்கிவிட்டன
இவ் ஆணாதிக்க கதைகள் எம் எதிகாலத்தையும் சுதந்திரத்தையும்
கட்டுப்படுத்தி பூமிக்குள் குழி தோண்டி புதைத்து விட்டன
இதிலிருந்து எப்போது தான் எம் அடிமை விலங்குகளை உடைத்தெறிவது?

எல்லோருடைய வாழ்கையும் மெழுகுவர்த்தி


எல்லோருடைய வாழ்கையும் மெழுகுவர்த்தி போல
தூரத்தில் இருந்து பார்த்தல் ஒளி மட்டும் தெரியும்
அருகில் சென்று பாருங்கள் அவர்கள் கண்ணீர் வடிப்பது புரியும்.

ஏன் மௌனமாகவுள்ளாய் பெண்னே....


உன் வார்த்தைகளை புதைத்து
உனக்கு வந்த துன்பங்களை கூறாது
இன்றும் ஏன் மௌனமாகவுள்ளாய் பெண்னே....

நம் நாட்டு கல்வி முறை


நம் நாட்டு கல்வி முறையானது சுயமாக மாணவர்கள் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கவில்லை பரீட்சை நோக்கில் மனப்பாடம் செய்யும் கல்வி முறையாக மாணவர்களினை ஆக்குகின்றது.........

உள்ளம்..............


சில நொடிகளில் மனிதம் வீசிய வலையில்
நிலையிலல்லா அன்பென தெரிந்தும்
சிக்கிவிடுகின்றது உள்ளம்..............

சாதி


நம் பெற்றோர் பிள்ளைகளுக்கு போதிய கல்வியறிவை ஊட்ட மறந்தாலும் சாதிய உணர்வை மட்டும் சிறுபாராயத்திலிருந்து ஊட்ட மறப்பதில்லை

தனியார் நிறுவனங்கள்


தனியார் நிறுவனங்கள் இன்று கல்வியினை வணிகமயப்படுத்துகின்றன" பிள்ளைகள் அங்கு சென்று படிக்கின்றனவோ இல்லையோ அவர்களை அங்கு அனுப்புவது தான் ஓர் நாகரீகமாக பெற்றோர் எண்ணுகிறார்கள்

என்னைவிட்டு விலகிப்போன


என்னைவிட்டு விலகிப்போன உன்னை விடாப்பிடியாய்
என் மனம் நினைத்துக் கொண்டிருக்கின்றது இருந்தும்
விரும்பி பிரிகின்றேன் ஏனெனில் என் இலட்சியங்கள்
அனைத்தும் உனக்கு பழகிய பின் வெறுப்பாய் போனதால்

திருமண வைபவம்


திருமண வைபவம் அன்று தொட்டு இன்றுவரை
சந்தையில் நடக்கும் வியாபாரத்தினைப் போலுள்ளது
பெண்கள் அங்கு அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளாய்
சீதனம் என்னும் பிச்சை வாங்குகின்ற ஆண்களிற்கு
பணத்தினை கொடுத்து அவர்களால் ஏலம் பேசப்படுகின்றார்கள்

துயர;


துயரங்களை எழுத விரும்பவில்லை
பேனாவில் கைபட்டதும்
வேதனைகளே வரிகளாய்
வெடித்து சிதறுகின்றது சொற்கள்

நிதிமயமாக்கல்




நிதிமயமாக்கல் காரணமாக கிராமப்புற சமூகங்கள் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன இதற்கு காரணம் அரசாங்கமும் வங்கிகளுமேயாகும் யுத்ததின் பின் வங்கிகள் தம் கிளைகளினை பெரும் எண்ணிக்கையளவில் அதிகரித்து ; மக்களுக்கு கடன்களை வழங்கியுள்ளன இன்றைய பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் அக்கடனை திரும்ப செலுத்தேலா நிலையில் உள்ளார்கள். வங்கி ஊழியர்கள் இன்று கந்துவெட்டிக்காரன் போல் தன் பணத்தினை அறவிடுவதற்காக அப்பாவி மக்களை பல வழிகளில் துன்புறுத்துகின்றார்கள்

அரசின் மேம்பாடு


இன்று எம் மக்கள் ஒரு நேர உணவு உண்பதற்கே எவ்வளவோ கஸ்ரப்படுகிறார்கள் ஆனால் எம் அரசு வீதிகள் துறைமுகங்கள் விமானநிலையங்கள் மற்றும் கட்டிடங்கள் உல்லாச விடுதிகள் போன்றவற்றை அமைப்பதற்கு பணத்தினை செலவிடுகின்றது

நான் அடிமையல்ல......


நான் அடிமையல்ல......

நான் அடிமையல்ல நானும் ஒரு ஜீவன்
அதிகாரம் உனக்கும் அடிமைப்பார்வை
எனக்கும் விதிக்கப்பட்டதல்ல
நானும் நீயும் சேர்ந்ததே இவ்வுலகம்
இச் சமூகம் உன்னை பார்ப்பது போல்
ஏன்னையும் பார்க்கட்டும்.
ஏன் தேகம் உணர்வுகளற்ற
ஜடப் பொருள் அல்ல - நீ
விரும்பியபடி என்னை பிடித்து கொள்ள.
என் இலட்சியங்களை திறந்து
உன் வார்த்தை படி நடப்பதற்கு
நான் ஒன்றும் அடிமையல்ல
நானும் உன்னைப்பேலுள்ள ஒரு-ஜீவன;

சமூகமும் பெண்களும்



சமூகமும் பெண்களும்

இன்றைய கால கட்டங்களில் பெண்களுக்கு விடுதலை என்று குரலெழுப்புவர்களின் தொகை அதிகரித்துக் கொண்டு செல்கிறதே தவிர எதற்கு எதிலிருந்து விடுதலை என்பது மக்கள் மத்தியில் சரியாக  எடுத்துக் கூறப்படவில்லை. நாம் வாழும் இச் சமூகம் அநீதியானது என்பதை நாம் ஏற்றுக் கொண்டு அந்த அநீதிகளினை ஆராய்ந்து அதை ஒழிப்பதன் மூலம் தான் நாம் விடுதலை அடைய முடியும். இவ் அநீதிகள் எவையும் எம் மீது பொறிக்கப்பட்டவையல்ல வரலாற்று ரீதியாக ஏற்பட்ட பொருளாதார கலாச்சார அரசியல் சமூக மாற்றங்களின் விளைவே. பெண்கள் ஆண்களினை போன்று கல்வி பயில்கிறார்கள் வேலை செய்கிறார்கள் இதை விட என்ன வேண்டும் என்ன விடுதலை வேண்டும் என்று கூறுபவர்களும் உண்டு.
எமது சமூக அமைப்பில் குடும்பம் முக்கிய பங்கு வகிக்கின்றது இக் குடும்பங்களில் நிலவும் பாகுபாடுகளும் பிற்போக்குதனமான கருத்துக்களுமே ஒரு பெண் தன்னிச்சையாக நம்பிக்கையோடு செயற்படுவதை தடுக்கின்றது. பெண்ணாணவள் பிறந்தத முதல் இறப்பு வரை தந்தை அண்ணண் கணவன் என்று யாரையாவது சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். இதனால் பெண் தனித்து வாழும் தன்மையை இழந்து கொள்கிறாள். எமது சமூகத்தில் பெண்களாக பிறப்பதே ஒரு சாபக்கேடாக நோக்கப்படுகிறது. சுhதாரண விளையாட்டு பொருட்களில் கூட பாகு பாடு காட்டப்படுகிறது ஆண் பிள்ளைகளுக்கு துப்பாக்கி கார் போன்ற பொருட்களினையும் பெண் பிள்ளைகளுக்கு பொம்மை சட்டி பானை போன்ற பொருட்களினை; வாங்கி கொடுக்கிறார்கள். உணவு விடையத்தில் கூட பெண்களுக்கு வீட்டில் அடக்கு முறை காணப்படுகின்றது அதாவது வீட்டிலுள்ள ஆண்கள் உண்ட பின்னே பெண்கள் உண்ண வேண்டும் என்னும் நிலை காணப்படுகின்றது.
ஒரு பெண்ணாணவள் எப்பவும் ஒரு ஆணுக்கு அடங்கி தான் வாழ வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. ஆண் என்பவன் எதை சொன்னாலும் பெண் என்பவள் எதிர்த்து கதைக்காமல் அதற்கு கீழ் படிந்து வாழ்ந்தால் தான் அவள் ஒரு நல்ல பெண் என எமது சமூகம் நோக்குகின்றது. அப் பெண் அவர்கள் கூறுவதற்கு எதிர்த்து கதைத்தாள் அவளை சரியில்லா பெண்ணாக எமது சமூகம் நோக்குகின்றது. காதல் செய்யும் உரிமை ஆண் பெண் அருவருக்குமே காணப்படுகின்றது ஆனால் குடும்பங்கள் பல இவ் உரிமையை பெண்ணுக்கு கொடுக்க மறுக்கின்றது. திருமணம் என்பது சில பெண்களுக்கு ஒரு அடக்கு முறையிலிருந்து இன்னோர் அடக்க முறைக்கு செல்லும் ஓர் வாயிலாகவே விளங்குகின்றது. மற்றும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்பவை பெண்களுக்கு இருப்பது தான் அழகு என்று எமது சமூகம் பெண்களினை அடக்கிவைக்க கூறுகின்றது பெண் என்பவள் எப்பவும் சத்தமாக கதைக்க கூடாது சிரிக்க கூடாது பொம்பில சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்னும் பழமொழியும் பெண்களினை அடக்கும் நோக்கோடு கூறப்படுகிறது வெளியில் ஆண் துணை இன்றி திரியக் கூடாது எப்பவும் ஓர் ஆணையே சார்ந்து வாழ வேண்டும் என்று எமது சமூகம் எதிர் பார்க்கின்றது.
பெண்களின் திறமைகளுக்கு முற்றப் புள்ளி வைக்கும் ஒரு தளமாகவே இன்று அதிகமான திருமணங்கள் காணப்படுபின்றது. இன்றைய பொருளாதார அமைப்பு முறை பெண்கள் தொழிலுக்கு செல்வதை கட்டாயப்படத்தி இருக்கின்ற போதும் ஊதியம் பெறும் தொழிலை கவணிப்பதோடு ஊதியம் பெறாத வீட்டு தொழிலையும் அவளே சுமக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. மற்றும் பெண்ணின் வாழ்க்கையானது கணவன் இறப்பதுடனே முடிகிறது. வுpவாகரத்து மறுமணம் என்பன சட்ட ரீதியாக கொடுக்கப்பட்ட போதும் சமூக ரீதியாக ஏற்றுக் கொள்வது அரிதாகவே காணப்படுகின்றது. மற்றும் பாலியல் வன் முறை பெண்கள் குடம்பத்தில் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது விரும்பியோ விரும்பாமலோ பெண் ஆனவல் தனது கணவனின் ஆசைகளுக்கு இனங்க வேண்டிய சமூக சூழல் காணப்படுகின்றது ஆண் என்ன பிழை செய்தாலும் அவனை ஏற்று பெண்ணாணவள் வாழவேண்டும் என எமது சமூகம் எதிர் பார்க்கிறது அவ்வாறு அவள் வாழா விடின் அவள் மீது தேவையில்லா குற்றங்களை சமூகம் சுமத்துகின்றது.
இவ்வாறு எமது சமூகத்திலுள்ள பல பெண்கள் பல்வேறு பட்ட ஒடுக்கு முறைகளுக்குள் தள்ளப்படுகிறார்கள். எனவே இவ் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக கிளர்ந்து நாம் எமது உரிமைகளினை பெற்று யாரையும் சார்ந்து வாழாது சுயமாக சிந்தித்து எமக்குள் ஒரு தன்னம்பிக்கையினை வளர்த்து நாம் ஓர் முழுமையான விடுதலை அடைவதன் மூலம் தான் சமூகமும் விடுதலையை பெற முடியும்.

அகல்யா. பிரான்சிஸ்கிளைம்

சீதனம்



சீதனம்







பெண்ணடிமை முறையில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் பொருளாதார கலாச்சார முறைகளில் சீதனமுறையும் ஒன்றாகும். பெண்களுக்கான திருமண நிறைவேற்றத்திற்கு இச் சீதனம் என்பது ஒரு கட்டாய நிபந்தனையாக அன்று தொட்டு இன்று வரை பல வளர்ச்சி மாற்றங்களின் ஊடாக இருந்து வருகிறது.  சீதனமுறையால் எமது சக சமூகத்தில் பொருளாதார பாதிப்பு மட்டும் ஏற்படவில்லை; மனிதன் படைத்த பணத்திற்கு மனிதனே விலை போவதுடன் அவனையே அளக்கும் அளவுகோலாக பணம் இங்கு மாற்றம் அடைகின்றது. இன்றைய பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பினை போல சீதன முறை அதிகரிப்பும் வளர்ச்சியடைந்து கொண்டு செல்கின்றது.

சீதனம் கொடுக்க வசதியற்ற குடும்பச் சூழலில் முதிர்கன்னியர் என்ற நிலையில் பல ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் இன்று சமூகத்தில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இச் சீதன முறைமை என்பது நிலவுடைமையின் கீழ் ஆணாதிக்க வரம்புகளுக்கு உட்பட்டதாகும். இந்த நடைமுறை சாதியம் போன்று தமிழ்ச் சூழலில் மிகவும் இறுக்கமானதாக இருந்து வருகின்றது.   ஒரு பெண் கல்வி கற்று அரசாங்கத் தொழில் பெற்று மாதாந்தம் நிரந்தர வருமானம் பெறுபவராக இருந்தும் கூட அப் பெண்ணுக்கு சீதனம் என்ற பெயரில் லட்சங்களும்இதங்கமும் இநிலமும் வழங்கியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் நமது தமிழ்ச் சூழலில் நிலைத்து நீடித்து வருகின்றது. அவ்வாறு ஆண் வீட்டார் கேட்டும் சீதனத்தை கடன்பட்டுக் கொடுத்து தமது பெண்ணைக் கரைசேர்க்கும் பெற்றோர் அக்கடனுக்குத் தமது ஆண் மகனைப் பொறுப்பாக்குவதுடன் அதே மகனுக்குப் பெண் பார்க்கும் போது தாம் மகளுக்குக் கொடுத்த அளவையும் விடக் கூடுதலாகச் சீதனம் பெற்றுக் கொள்ளவும் முன் நிற்கின்றனர். எனவே சீதனம் கொடுப்பதும் வாங்குவதும் ஒரு சுழல் வட்டத்தில் தொடர்கிறது. இதனால் ஏற்படும் துன்ப துயரங்கள் பாதிப்புக்கள் யாவும் ஒட்டு மொத்த சமூகத் துயரமாகவும் அவமானமாகவும் தொடருவதையிட்டுப் பழமைபேண்வாதிகள் கவலைப்படுவதில்லை. அதனை நியாயப்படுத்தவே முன்நிற்கின்றனர்.

தமிழ்த் தேசியத்தை உயர்த்தி நிற்கும் பழைமைவாதிகள் சீதனம் விளைவிக்கும் சமூக அநீதியைக் கேள்விக்கு உள்ளாக்கிக் கொள்வதில்லை. அவர்கள் சீதனத்தை உயர்வர்க்கஇ உயர்சாதியஇ சமூக அந்தஸ்தாகவே கொண்டுள்ளனர். அதன் பாதிப்பு ஒரு சமூகக் கேடாக வசதியற்ற ஏகப் பெரும்பான்மையான பெண்களை எப்படிப் பாதிக்கும் என்பது பற்றிச் சிந்திக்கப்படவே இல்லை. . அத்துடன் மதம்இ பண்பாடுஇ மரபுஇ வழமைஇ குடும்ப கௌரவம் என்பனவும் சீதன முறைமையைச் செழுமைப்படுத்தி நிற்கின்றன. ஊடகங்கள் எதுவுமே இச் சமூகப் பிற்போக்குத்தனம் அல்லது பெண்கள் மீதான அநீதி பற்றி கேள்வி எழுப்பிக் கொள்வதில்லை. இன்றும் தமிழ் ஆங்கில ஊடகங்களில் திருமண பந்தம் தேடும் விளம்பரங்களில் சாதி பற்றித் தவறாது குறிப்பிடப்படுவதுடன் சீதனம் பேசித் தீர்க்கப்படும் அல்லது தகுந்த சீதனம் வழங்கப்படும் என்றே வாராந்தம் வந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் மத்தியில் மண்ணடிமைஇ பெண்ணடிமைஇ சாதியடிமை போன்ற ஒடுக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் நீடிக்கும் நிலையில் எவ்வாறு இன விடுதலை என்பதைச் சாத்தியமாக்க முடியும்.
          
பெண் ஒடுக்குமுறையின் ஒரு அம்சமாகக் காணப்படுவது சீதனமாகும். இச் சீதன முறையை ஒழிப்பதற்குரிய சமூக விழிப்புணர்வை மாற்றுக் கருத்துப் பிரசாரத்தின் மூலம் முன்னெடுக்க வேண்டும். சீதனம் கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை என்பது நடைமுறையாக்கம் பெறும் வகையில் பரந்துபட்ட இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும். எல்லாப் பெண்களும் சீதனம் கொடுத்து திருமணம் செய்யமாட்டோம் என்ற முடிவுக்கு வரவேண்டும். அப்போது யாரை திருமணம் செய்து கொள்வார்கள் சீதனம் என்னும் பிச்சை எடுக்கும் ஆணாதிக்கவாதிகள்? உயர்வர்க்கக் குடும்பங்களில் சீதனம் ஒரு சமூக அந்தஸ்தாகவும் தனிச் சொத்துடமை பேணுதலாகவும் சொத்து விரிவாக்கமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அதுவே சாதாரண உழைக்கும் மக்களுக்கு குறிப்பாகப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் ஒருவகையான உடைக்க முடியாத விலங்காக இருந்து வருகின்றது. இதனை உடைக்க எல்லாப் பெண்களும் இணைந்து போராட வேண்டும்.

அகல்யா. பிரான்சிஸ்கிளைம்

ஒரு சீவல்தொழிலாளியின் அனுபவங்கள்: தர்மபாலசிங்கம் 67 வயது

ஒரு சீவல்தொழிலாளியின் அனுபவங்கள்: தர்மபாலசிங்கம் 67 வயது

நான் 18வயதில் எனது மச்சானிடமிருந்து சீவல் தொழிலை பழகினேன். 1991ம் ஆண்டு இடம்பெயர்ந்து வன்னியில் சிராஞ்க்குளத்தில் வசித்தேன்.அங்கும் சீவல் தொழிலை செய்தேன்;. பின்னர்;2002ம் ஆண்டு அச்சுவேலிக்கு திரும்ப வந்து சீவல் தொழிலை செய்தேன் நான் 60வது வயதில் ஓய்வூதியத்தினை பெற்றேன.; ஓய்வூதியம் எடுத்துக் கொண்டும் சீவுகின்றேன். தற்போது நான்; பொச்சுக்கட்டி; மரம் ஏறுகிறேன். 10 தென்னை மரம் சீவுகின்றேன்.
காலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்து சீவலுக்கு சென்று 9.30க்குள் கள்ளு இறக்கிக் கொண்டந்திடுவேன.;; பாளை தட்டுற முறை என்றால் கொஞ்சம் நேரமாகும் ஒன்றவிட்ட ஒரு நாள் பாளை தட்ட வேண்டும். பின் 11.30க்கு முன்னர் தவறணைக்குள் கள்ளு கொண்டு போய் கொடுக்க வேண்டும.; பின்னர் தோட்டத்தில் போய் வேலை செய்வேன்.மாடு கொண்டு போய் கட்டுவேன். பின்னர் மாலை 4.30க்கு திரும்பவும் சென்று 10 தென்னையும் ஏறி சீவி 6.30க்கு முன்னர் தவறணைக்கு கள்ளு கொண்டு செல்வேன. ஓரு நாளைக்கு 15 போத்தல் கள்ளுக்குகிட்ட கொண்டு போய் கொடுப்பேன். எனக்கு வருத்தம் வருகில் கால்களில் அதிக காயங்கள் வரும் நெஞ்சு வருத்தங்கள் வரும்.
கத்தி ஆரம்பத்தில் நல்ல கூராகவும் பெரிதாகவும் இருந்தது இப்போது எப்படி தேய்ந்து இருக்குது என்று பாருங்கோ. இதனைப் போல தான் நாங்களும் தேய்ந்து போகிறோம். மரத்தில் ஏறும் போது சீவிலிகூடு கத்தி பாளைதடடு;ம் பொல்லு கள்ளு ஊத்த போத்தல் என்பன கொண்டு செல்வேன். முந்தி நான் பொச்சு மட்டை கட்டாமல் சீவும் போது கால் சரியாக காச்சுப் போய் இருக்கும்.தற்போது பொச்சு கட்டி சீவுவதால் பறவாயில்லை. தோட்டமும் செய்வதால் ஆரம்பத்தில் வருமானம் பறவாயில்லாமலலிருந்தது. தற் போது வெங்காயம் எல்லாம் அழிவடைந்ததால் பெரிதாக வருமானம் இல்லை.
நான் 18 வயதில் கள்ளு சீவேக்க மரவரி முறை இருந்தது. நாங்கள் 5 பேர் இணைந்து மரம் சீவுவதாக அனுமதி எடுப்போம்100ரூபா கட்டி. நான் ஆரம்பத்தில 90 போத்தல் கள்ளு ஒரு நாளைக்கு சீவி கொடுப்பேன.; அப்போது கள்ளு 10சதம்;. பின்னர் 1972ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது நான் 552வது உறுப்பினராக வேலை செய்தேன்.
கூட்டுறவு சங்கங்கள் வந்ததால் எங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. தொழில் விடுற காலத்தில் சமாசத்திலிருந்த எங்களுக்கு ஊதியத் தொகை வழங்கப்படும.; மரவரி இருந்த காலத்தில் கள்ளு எல்லாம் சீவி முதலாளிக்கே கொடுக்கனும்.ஆனால் கூட்டறவு வந்தபின் எங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.
விபத்து நதி கட்டாய சேமம் என்று சொல்லி எங்கட கள்ளிலிருந்து 1ருபா கழிப்பார்கள.; சேமப் பணம் மூன்று மாதத்திற்கு ஒருக்கா தருவார்கள.; தொழில் விடேக்க கட்டாய சேமப்பணம் தருவார்கள். விபத்து நிதி தந்போது ஓய்வூதியத்திட்டமாக மாற்றப்பட்டு 60 வயதிற்கு பிற்பாடு தருவார்கள.; நான் ஓய்வூதிய பணமும் எடுத்துக் கொண்டு சீவி வருகின்றேன். சீவல் தொழிலை எனது அப்பு மாமா மற்றது நான் செய்கிறேன் எனி எனக்கு பிறகு ஒருவரும் செய்கிறார்கள் இல்லை இளம் தலை முறையினர் படிக்கிறார்கள்.படிக்காதவர்கள் கூலி வேலைக்கு போகிறார்கள்.
1960ம் ஆண்டு இடம் பெற்ற சாதி எதிர்ப்பு போராட்டங்களுடன் நானும் இணைந்து செயற்பட்டேன.; தேனீர் கடை எதிர்ப்பு போராட்டங்களுடன் எல்லாம் இணைந்து செயற்பட்டேன். எங்கட வாசகசாலையில் ரஷ்யா கொமினிஸ்ட் சீனா கொமினிஸ்ட் என்று இரண்டு கொமினிஸ்ட்கள் இருந்தன.இதில் சீனா கொமினிஸ்டுடன்; நானும் ஒரு உறுப்பினராக அங்கம் வகித்தேன்.




இவளும் என் தங்கை

இவளும் என் தங்கை

பாலுக்கு சக்கரை சேர்க்க முடியவில்லை இது பணக்காரன் கவலை
 கூழுக்கு உப்பில்லை என்பது ஏழையின் ஏக்கம்
 எங்கோ ஓர் நாய் வந்திடுமோ என்பது இவளின் ஏக்கம்
ஆறிப்போன நூடில்ஸ் வேண்டாம் என
 அடம் பிடிக்கும் மேல் வீட்டு குழந்தை
 நாறிப்போன சாதத்துக்காய் ஈக்களுடன்
 சண்டை பிடிக்கிறாள் என் தங்கை.

முஸ்லீம் மக்களின் இன்றைய நிலை


1990ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை விட்டு துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் 2003ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு மீள வந்து இற்றைக்கு 11வருடங்களாகியும் குடியிருப்பதற்கு நிரந்தர வீடுகள் காணி உறுதிகள் வீட்டுத்திட்ட வசதிகள் எவையும் கிடைக்க பெறாத நிலையில் பல இன்னல்களினை சந்திக்கிறார்கள். அவர்களில் கதீஜா பாடசாலையில் 30 குடும்பங்கள் அடிப்படை வசதிகள் ஏதும் அற்ற நிலையில் இன்று வரை வசித்து வருகிறார்கள்.

பசியால் வாடும் பிஞ்சுள்ளங்கள்


சிறிதாக இருந்த கோவில்கள் எல்லாம் கோபுரங்கள் ஆகின்றன
நானோ இருப்பதற்கு வீடின்றி தெருவில் அலைகின்றேன்
உயிரற்ற சிலைகளுக்கு எல்லாம் உணவினை படைக்கின்றார்கள்
நானோ உண்ண உணவின்றி அலைகின்றேன் பல நாட்களாக
கடவுள் என்ற பெயரில் எத்தனையோ லட்சங்கள் செலவிடுகின்றீர்கள்
எம்மைப்போல் பசியாய் உள்ள பிஞ்சுள்ளங்களை உமக்கு தெரியவில்லையா?????????????