விளிம்பு நிலையிலுள்ள ஊரி கிராமத்து மக்களின் நிலை

விளிம்பு நிலையிலுள்ள ஊரி கிராமத்து மக்களின் நிலை

யாழ்ப்பாணத்தில் விளிம்புநிலையிலிருக்கும் கிராமங்களில் ஊரி கிராமமும் ஒன்றாகும் இக்கிராமம் காரைநகர் பிரதேசத்தில் பாலாவோடை கிராமத்திற்கு அண்மையில் j/44 கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள வறிய கிராமம். இங்கு 316 குடுப்பங்கள் வசிக்கிறார்கள.; இவ் மக்கள் 1987- 1995 ம் ஆண்டு காலப்பகுதிகயில் பல இடப் பெயர்வுகலை சந்தித்து பல இடங்களுக்கும் இடம் பெயர்ந்து சென்றார்கள் தற்போது இக்கிராமத்திலே நிரந்தரமாக வசித்து வருகிறார்கள். இங்குள்ள மக்கள் காலநிலைக்கு ஏற்ப கூட்டுவலை மீன்; பிடி தொழில் சீவல் தொழில் என 2 தொழில் புரிந்து வருகிறார்கள். இக்கிராமத்திலுள்ள பெண்கள் ஆண்களோடு இணைந்து கடற்தொழில் புரிகிறார்கள். இவர்களுக்கு அருகில் சிறிய கடல் காணப்படுவதால் மீன்கள் பிடிக்க முடிவதில்லை நண்டு இறால் போன்றவை தான் இவர்களால் பிடிக்க முடிகின்றது. இதனால் அதிகளவில் இலாபத்தினை பெற முடியவில்லை இவர்களினால் 300 ரூபாவுக்குள்ளே நாளாந்த வருமானமாக உழைக்க முடிகின்றது.
இக்கிராமத்திலுள்ள மக்கள் அதிகம் தரம் 7 11வரையே படித்துள்ளார்கள் இவர்கள் கல்வி கற்பதற்கேற்ப பொருளாதார சூழ்நிலைகள் அமையவில்லை. தற்போது இரண்டு  பிள்ளைகள் தான் பல்கலைக்கழகம் சென்றுள்ளார்கள். பொருளாதார வசதி மிகவும் குறைந்துள்ளதால் இவர்கள் தனியார் நிலையங்களுக்கு சென்று கல்வி கற்க முடியவில்லை. தற்போது போதகர் கமல் தலைமையில் ரியூசன் ஒன்றினை  நடாத்தி வருகிறார்கள் இலவசமாக. பல ஆசிரியர்களும் இங்கு வந்து கல்வி கற்பிக்கிறார்கள். வெளிநாட்டில் உள்ள சிலரின் ஒத்துழைப்புடன் இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்படுகின்றது.
இங்குள்ள மக்கள் பல பிரச்சனைகளை எதிர் கொள்கிறார்கள் அதில் ஒன்று சாதி ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும் பாண்மை மக்களினால் பேச விருப்பப் பாடாத ஒன்றாக சாதி விளங்குகின்றது. இப்பிரச்சனை எங்கள் சமூகத்தில் இல்லை என்று கூறிக் கொண்டு சாதி பார்க்கும் அறிவாளிகள் தான் எம்  சமூகத்தில் உள்ளார்கள். இங்கு சாதியின்னையா? அல்லது சாதி மறைப்பா? என்ற நிலைதான் யாழ்கிராமங்களில் காணப்படுகின்றது. அந்த வகையில் தான் இக்கிராம மக்களும் உள்ளார்கள். இக்கிராம மக்கள் சாதிய கட்டமைப்பில் மிகவும் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என யாழ்ப்பாணத்தில் உயர்சாதியினர் என்னு தம்மை கூறிக் கொள்பவர்களால் அழைக்கப்படுகின்றார்கள். இக்கிராமத்திற்கு அண்மையில் பாலாவோடை என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசிப்பவர்கள் வெள்ளாளர் என்று தம்மை கூறிக் கொள்கிறார்கள்;. இவர்கள் பல சாதிய ஒடுக்கு முறைகளினை ஊரி கிராம மக்கள் மேல் புரிகிறார்கள்.
யாழ்சமூகத்தில் சாதிக்கொரு கோவில்கள் என ஆரம்ப காலங்களிலிருந்து இன்று வரை இருந்து வருகின்றது இந்த வகையில் தான் இக்கிராமத்திலும் அதே நிலமைதான் காணப்படுகின்றது. 1990ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஊரிகிராம மக்கள் பாலாவோடை கிராமத்திலுளள்ள அம்மன் கோவிலினுள் தேர் திரு விழா ஒன்றுக்கு சென்று அத் தேரை தொட்டு விட்டார்கள் என்பதற்காக தம்மை உயர்சாதிஎன கூறிக் கொள்ளும் பாலாவோடை மக்கள் அத் தேரினையே எரித்தார்கள்.
1996ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஊரிகிராம மக்கள் பாலோவோடை கிராமத்தினுள் நுழைந்து விட்டார்கள் என்பதற்காக இரு கிராமத்தவர்களுக்கிடையிலும் பாரிய சண்டை ஏற்பட்டது இதனால் இன்று வரை இரண்டு கிராம மக்களுக்கும் எந்த வித தொடர்பாடல்களும் அற்ற வகையில் வசிக்கிறார்கள். இருகிராம மக்களுக்கும் என ஒவ்வொரு பொதுக்கிணறுகள் இருக்கின்றது. பாலோவோடை கிராமத்து மக்கள் ஊரிகிராமத்தவர்களின் கிணறுகளில் ஒரு போதும் தண்ணீர் அள்ள மாட்டார்கள். மற்றும் ஊரி கிராமத்து மக்களை தங்களது கிணறுகளில் தண்ணீர் அள்ள ஒருபோதும் இவர்கள் விடமாட்டார்கள்.
இக்கிராம மக்கள் தண்ணீர் பிரச்சனைகளினையும் எதிர் கொள்கின்றனர் ஆரம்ப காலங்களில் நல்ல தண்ணீர் ஊரி கிராமத்தில் காணப்பட்டது 1995ம் ஆண்டு இடப்பெயர்வின் பின் இக்கிராமத்தில் உள்ள கிணற்று தண்ணீர்கள் குடிக்க முடியா நிலை காணப்பட்டது. ஏனெனில் தண்ணீர் உப்புத் தண்ணீராக காணப்பட்டது. அதனால் இவர்கள் இன்று சுண்ணாகத்திலிருந்து கரைநகர் அபிவிருத்தி சங்கத்தினால் விநியோகிக்கப்படும் தண்ணீரினை பணம் கொடுத்து வாங்குகின்றார்கள்.
இக்கிராமத்திலுள்ள தரம் 1-5 வரையான மாணவர்கள் அமெரிக்கன்மிசன் தமிழ்கலவன் பாடசாலையில் கல்வி பயில்கிறார்கள். மேலதிக தமது கல்வியினை வலந்தன் சந்தியில் அமைந்திருக்கும் தியாகராஜா மகாவித்தியாலைய பாடசாலையில் 6-யுஃடு வரை கற்று கொள்கின்றனர். தியாகராஜா மகாவித்தியாலைய கல்லூரி இக்கிராமத்திலிருந்து 6மஅ தூரத்தில் அமைந்துள்ளது. இவர்கள்; பாடசாலைக்கு நடந்து செல்வதனால் பிந்தி பாடசாலை செல்ல வேண்டிய நிலமை காணப்படுகின்றது. எனவே இவர்கள் பாடசாலை நேரத்திற்கு செல்வதற்கு இக்கிராமத்தில் தற்போது ஊழியம் செய்கின்ற போதகர் கமல் சீரிபி பஸ்சினை பிள்ளைகளுக்கு ஒழுங்கு செய்து கொடுத்துள்ளார். 100மாணவர்கள் இங்;கிருந்து இப்பாடசாலைக்கு பஸ்சில் சென்று வருகின்றார்கள். ஆரம்பத்தில் இக்கிராமத்திற்கு பஸ் வந்த போது பல பிரச்சனைகளினை இவர்கள் எதிர்கொண்டார்கள் அதாவது பஸ்சினை இக்கிராமத்திற்கு விடமாட்டோம் என்று பிரச்சனைப்பட்டார்கள் பின்னர் பஸ்சை ஒழுங்கான நேரத்திற்கு பிள்ளைகளுக்கு விடவில்லை. மற்றும் பாலோவோடை பொது மக்களினையும் பஸ்ஸில் ஏற்றி கொண்டு சென்றார்கள் இதனால் பாடசாலை பிள்ளைகள் பஸ்சில் ஏற முடியேல நிலமை காணப்பட்டது பின்னர் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தற்போது பாடசாலை பிள்ளைகள் மட்டும் பஸ்சில் செல்ல ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பாலோவோடை கிராம மக்களுக்கு இங்கு பஸ் செல்வது விருப்பமில்hமையால் 2012ம் ஆண்டு காலப்பகுதியில் பஸ்சினையே கொளுத்தும் அளவிற்கு சென்றார்கள்.  இப் பாலாவோடைகிராமத்தவர்கள் சாதி வெறி பிடித்த முட்டாள்களாக விளங்குகின்றார்கள்.
தியாகராஜா பாடசாலைக்கு இக் கிராமத்திலிருந்து பாடசாலை செல்லும் பல பிள்ளைகள் பாலாவோடை கிராமத்து ஆசிரியர்களினாலும் மாணவர்களினாலும் பல பிரச்சனைகளினை எதிர் கொள்கிறார்கள். ஆசிரியர்கள் இவர்களை பெயர் சொல்லி அழைப்பதில்லை அதிகளவில் இவ் மாணவர்களினை பேசிக் கொள்கிறார்கள். மற்றும் இவர்களினை கவனம் எடுத்து கல்வி கற்பிப்பதில்லை வகுப்பின் பிற்பகுதியிலே இவர்களினை இருத்தி கொள்கிறார்கள். பாலாவோடை மாணவர்களும் இவர்களுடன் இணைந்து கதைத்து கொள்வதில்லை அவ்வாறு கதைத்த கொண்டாலும் பாடசாலைகில் மட்டுமே வீட்டீற்கு வந்தவுடன் இவர்களினை யார் என்றே தெரியாதமாதிரி நடந்து கொள்கிறார்கள்.
இக்கிராமத்திலுள்ள பிள்ளைகள்பெரும் பாலும் இளவயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இங்குள்ள பெண்கள் மீன்பிடி தொழிலுக்க ஆண்களுடன் இணையாக செல்கின்றார்கள் இதனை தவிர வேறு சுய தொழில்கள் செய்ய வில்லை சிலர்; தையல் பயிற்சியினை படித்துள்ளார்கள் ஆனால் தையல் மிசின் இல்லாததால் தையல் தொழில் செய்ய முடியவில்லை. இக்கிராமத்து பெண்கள் வேலை வாய்ப்புக்கள் அற்ற நிலையில் வீட்டு வேலைகளினை மட்டும் புரிந்து கொண்டு வாழ்கிறார்கள்.
இக்கிராமத்து மக்கள் சாதி பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளினை எதிர் நோக்கி வருகிறார்கள். இவர்களின் இவ் நிலமை தொடர்பாக எந்த வித முன்னேற்ற செயற்பாடுகளும் யாரினாலும் இது வரை மேற் கொள்ளப்படவில்லை இவ்வாறான பல கிராமங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவே பலர் அறியாமல் வாழ்கிறார்கள் இக்கிராமத்திலுள்ள மக்களில் ஒரு சில மக்கள் தனித்துவமாக முன்னேறிய போதும் இன்றும் அதிகமான மக்கள் சாதி பொருளாதார ரீதியாக சுரண்டப்பட்டு பின்னோக்கிய நிலையில் வாழ்கிறார்கள். ஒடுக்கப்படும் இச் சமூக மக்கள் எப்பொழுதுமே மையத்தை நோக்கி நகர முடியாது விளிம்பு நிலையிலே இருப்பதனை கண்டு கொள்ளலாம்.

அகல்யா. பிரான்சிஸ்கிளைன்

No comments:

Post a Comment