ஒரு சீவல்தொழிலாளியின் அனுபவங்கள்: தர்மபாலசிங்கம் 67 வயது

ஒரு சீவல்தொழிலாளியின் அனுபவங்கள்: தர்மபாலசிங்கம் 67 வயது

நான் 18வயதில் எனது மச்சானிடமிருந்து சீவல் தொழிலை பழகினேன். 1991ம் ஆண்டு இடம்பெயர்ந்து வன்னியில் சிராஞ்க்குளத்தில் வசித்தேன்.அங்கும் சீவல் தொழிலை செய்தேன்;. பின்னர்;2002ம் ஆண்டு அச்சுவேலிக்கு திரும்ப வந்து சீவல் தொழிலை செய்தேன் நான் 60வது வயதில் ஓய்வூதியத்தினை பெற்றேன.; ஓய்வூதியம் எடுத்துக் கொண்டும் சீவுகின்றேன். தற்போது நான்; பொச்சுக்கட்டி; மரம் ஏறுகிறேன். 10 தென்னை மரம் சீவுகின்றேன்.
காலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்து சீவலுக்கு சென்று 9.30க்குள் கள்ளு இறக்கிக் கொண்டந்திடுவேன.;; பாளை தட்டுற முறை என்றால் கொஞ்சம் நேரமாகும் ஒன்றவிட்ட ஒரு நாள் பாளை தட்ட வேண்டும். பின் 11.30க்கு முன்னர் தவறணைக்குள் கள்ளு கொண்டு போய் கொடுக்க வேண்டும.; பின்னர் தோட்டத்தில் போய் வேலை செய்வேன்.மாடு கொண்டு போய் கட்டுவேன். பின்னர் மாலை 4.30க்கு திரும்பவும் சென்று 10 தென்னையும் ஏறி சீவி 6.30க்கு முன்னர் தவறணைக்கு கள்ளு கொண்டு செல்வேன. ஓரு நாளைக்கு 15 போத்தல் கள்ளுக்குகிட்ட கொண்டு போய் கொடுப்பேன். எனக்கு வருத்தம் வருகில் கால்களில் அதிக காயங்கள் வரும் நெஞ்சு வருத்தங்கள் வரும்.
கத்தி ஆரம்பத்தில் நல்ல கூராகவும் பெரிதாகவும் இருந்தது இப்போது எப்படி தேய்ந்து இருக்குது என்று பாருங்கோ. இதனைப் போல தான் நாங்களும் தேய்ந்து போகிறோம். மரத்தில் ஏறும் போது சீவிலிகூடு கத்தி பாளைதடடு;ம் பொல்லு கள்ளு ஊத்த போத்தல் என்பன கொண்டு செல்வேன். முந்தி நான் பொச்சு மட்டை கட்டாமல் சீவும் போது கால் சரியாக காச்சுப் போய் இருக்கும்.தற்போது பொச்சு கட்டி சீவுவதால் பறவாயில்லை. தோட்டமும் செய்வதால் ஆரம்பத்தில் வருமானம் பறவாயில்லாமலலிருந்தது. தற் போது வெங்காயம் எல்லாம் அழிவடைந்ததால் பெரிதாக வருமானம் இல்லை.
நான் 18 வயதில் கள்ளு சீவேக்க மரவரி முறை இருந்தது. நாங்கள் 5 பேர் இணைந்து மரம் சீவுவதாக அனுமதி எடுப்போம்100ரூபா கட்டி. நான் ஆரம்பத்தில 90 போத்தல் கள்ளு ஒரு நாளைக்கு சீவி கொடுப்பேன.; அப்போது கள்ளு 10சதம்;. பின்னர் 1972ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது நான் 552வது உறுப்பினராக வேலை செய்தேன்.
கூட்டுறவு சங்கங்கள் வந்ததால் எங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. தொழில் விடுற காலத்தில் சமாசத்திலிருந்த எங்களுக்கு ஊதியத் தொகை வழங்கப்படும.; மரவரி இருந்த காலத்தில் கள்ளு எல்லாம் சீவி முதலாளிக்கே கொடுக்கனும்.ஆனால் கூட்டறவு வந்தபின் எங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.
விபத்து நதி கட்டாய சேமம் என்று சொல்லி எங்கட கள்ளிலிருந்து 1ருபா கழிப்பார்கள.; சேமப் பணம் மூன்று மாதத்திற்கு ஒருக்கா தருவார்கள.; தொழில் விடேக்க கட்டாய சேமப்பணம் தருவார்கள். விபத்து நிதி தந்போது ஓய்வூதியத்திட்டமாக மாற்றப்பட்டு 60 வயதிற்கு பிற்பாடு தருவார்கள.; நான் ஓய்வூதிய பணமும் எடுத்துக் கொண்டு சீவி வருகின்றேன். சீவல் தொழிலை எனது அப்பு மாமா மற்றது நான் செய்கிறேன் எனி எனக்கு பிறகு ஒருவரும் செய்கிறார்கள் இல்லை இளம் தலை முறையினர் படிக்கிறார்கள்.படிக்காதவர்கள் கூலி வேலைக்கு போகிறார்கள்.
1960ம் ஆண்டு இடம் பெற்ற சாதி எதிர்ப்பு போராட்டங்களுடன் நானும் இணைந்து செயற்பட்டேன.; தேனீர் கடை எதிர்ப்பு போராட்டங்களுடன் எல்லாம் இணைந்து செயற்பட்டேன். எங்கட வாசகசாலையில் ரஷ்யா கொமினிஸ்ட் சீனா கொமினிஸ்ட் என்று இரண்டு கொமினிஸ்ட்கள் இருந்தன.இதில் சீனா கொமினிஸ்டுடன்; நானும் ஒரு உறுப்பினராக அங்கம் வகித்தேன்.




No comments:

Post a Comment