சீதனம்



சீதனம்







பெண்ணடிமை முறையில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் பொருளாதார கலாச்சார முறைகளில் சீதனமுறையும் ஒன்றாகும். பெண்களுக்கான திருமண நிறைவேற்றத்திற்கு இச் சீதனம் என்பது ஒரு கட்டாய நிபந்தனையாக அன்று தொட்டு இன்று வரை பல வளர்ச்சி மாற்றங்களின் ஊடாக இருந்து வருகிறது.  சீதனமுறையால் எமது சக சமூகத்தில் பொருளாதார பாதிப்பு மட்டும் ஏற்படவில்லை; மனிதன் படைத்த பணத்திற்கு மனிதனே விலை போவதுடன் அவனையே அளக்கும் அளவுகோலாக பணம் இங்கு மாற்றம் அடைகின்றது. இன்றைய பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பினை போல சீதன முறை அதிகரிப்பும் வளர்ச்சியடைந்து கொண்டு செல்கின்றது.

சீதனம் கொடுக்க வசதியற்ற குடும்பச் சூழலில் முதிர்கன்னியர் என்ற நிலையில் பல ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் இன்று சமூகத்தில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இச் சீதன முறைமை என்பது நிலவுடைமையின் கீழ் ஆணாதிக்க வரம்புகளுக்கு உட்பட்டதாகும். இந்த நடைமுறை சாதியம் போன்று தமிழ்ச் சூழலில் மிகவும் இறுக்கமானதாக இருந்து வருகின்றது.   ஒரு பெண் கல்வி கற்று அரசாங்கத் தொழில் பெற்று மாதாந்தம் நிரந்தர வருமானம் பெறுபவராக இருந்தும் கூட அப் பெண்ணுக்கு சீதனம் என்ற பெயரில் லட்சங்களும்இதங்கமும் இநிலமும் வழங்கியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் நமது தமிழ்ச் சூழலில் நிலைத்து நீடித்து வருகின்றது. அவ்வாறு ஆண் வீட்டார் கேட்டும் சீதனத்தை கடன்பட்டுக் கொடுத்து தமது பெண்ணைக் கரைசேர்க்கும் பெற்றோர் அக்கடனுக்குத் தமது ஆண் மகனைப் பொறுப்பாக்குவதுடன் அதே மகனுக்குப் பெண் பார்க்கும் போது தாம் மகளுக்குக் கொடுத்த அளவையும் விடக் கூடுதலாகச் சீதனம் பெற்றுக் கொள்ளவும் முன் நிற்கின்றனர். எனவே சீதனம் கொடுப்பதும் வாங்குவதும் ஒரு சுழல் வட்டத்தில் தொடர்கிறது. இதனால் ஏற்படும் துன்ப துயரங்கள் பாதிப்புக்கள் யாவும் ஒட்டு மொத்த சமூகத் துயரமாகவும் அவமானமாகவும் தொடருவதையிட்டுப் பழமைபேண்வாதிகள் கவலைப்படுவதில்லை. அதனை நியாயப்படுத்தவே முன்நிற்கின்றனர்.

தமிழ்த் தேசியத்தை உயர்த்தி நிற்கும் பழைமைவாதிகள் சீதனம் விளைவிக்கும் சமூக அநீதியைக் கேள்விக்கு உள்ளாக்கிக் கொள்வதில்லை. அவர்கள் சீதனத்தை உயர்வர்க்கஇ உயர்சாதியஇ சமூக அந்தஸ்தாகவே கொண்டுள்ளனர். அதன் பாதிப்பு ஒரு சமூகக் கேடாக வசதியற்ற ஏகப் பெரும்பான்மையான பெண்களை எப்படிப் பாதிக்கும் என்பது பற்றிச் சிந்திக்கப்படவே இல்லை. . அத்துடன் மதம்இ பண்பாடுஇ மரபுஇ வழமைஇ குடும்ப கௌரவம் என்பனவும் சீதன முறைமையைச் செழுமைப்படுத்தி நிற்கின்றன. ஊடகங்கள் எதுவுமே இச் சமூகப் பிற்போக்குத்தனம் அல்லது பெண்கள் மீதான அநீதி பற்றி கேள்வி எழுப்பிக் கொள்வதில்லை. இன்றும் தமிழ் ஆங்கில ஊடகங்களில் திருமண பந்தம் தேடும் விளம்பரங்களில் சாதி பற்றித் தவறாது குறிப்பிடப்படுவதுடன் சீதனம் பேசித் தீர்க்கப்படும் அல்லது தகுந்த சீதனம் வழங்கப்படும் என்றே வாராந்தம் வந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் மத்தியில் மண்ணடிமைஇ பெண்ணடிமைஇ சாதியடிமை போன்ற ஒடுக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் நீடிக்கும் நிலையில் எவ்வாறு இன விடுதலை என்பதைச் சாத்தியமாக்க முடியும்.
          
பெண் ஒடுக்குமுறையின் ஒரு அம்சமாகக் காணப்படுவது சீதனமாகும். இச் சீதன முறையை ஒழிப்பதற்குரிய சமூக விழிப்புணர்வை மாற்றுக் கருத்துப் பிரசாரத்தின் மூலம் முன்னெடுக்க வேண்டும். சீதனம் கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை என்பது நடைமுறையாக்கம் பெறும் வகையில் பரந்துபட்ட இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும். எல்லாப் பெண்களும் சீதனம் கொடுத்து திருமணம் செய்யமாட்டோம் என்ற முடிவுக்கு வரவேண்டும். அப்போது யாரை திருமணம் செய்து கொள்வார்கள் சீதனம் என்னும் பிச்சை எடுக்கும் ஆணாதிக்கவாதிகள்? உயர்வர்க்கக் குடும்பங்களில் சீதனம் ஒரு சமூக அந்தஸ்தாகவும் தனிச் சொத்துடமை பேணுதலாகவும் சொத்து விரிவாக்கமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அதுவே சாதாரண உழைக்கும் மக்களுக்கு குறிப்பாகப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் ஒருவகையான உடைக்க முடியாத விலங்காக இருந்து வருகின்றது. இதனை உடைக்க எல்லாப் பெண்களும் இணைந்து போராட வேண்டும்.

அகல்யா. பிரான்சிஸ்கிளைம்

2 comments:

  1. ஒவ்வொரு பெண்ணும் நன்றாக படித்து முன்னேறி அவர்கள், தான் யாரையும் சாராமல் தன்காலில் நிற்பவர்களாக இருக்க வேண்டும். பிறகு சீதனம் கேட்பவன் எனக்கு வேண்டாம் என்று ஒட்டுமொத்த பெண்கள் உறுதி எடுக்க வேண்டும். அப்போ ஆண்களும் வேறு வழி இன்றி சீதனத்தை யோசித்து கூட பார்க்க முடியாமல் ஆகி விடும்..

    ReplyDelete
  2. ஆண்கள் யோசிக்க வேண்டும். தன்னை விற்று பொழைக்கும் பொழப்பெல்லாம் ஒரு பொழப்பா? நீ எப்போ சீதனம் கேட்டாயோ அன்றே நீ பணத்தால் வாங்கப்படும் ஒரு பொருளாகிவிட்டாய். உன்னை கொண்டு விபச்சாரம் மட்டுமே செய்ய இயலும் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete