ஓர் பெண்ணின் கதறல்

ஓர் பெண்ணின் கதறல்

நான் பல சவால்களுக்கு மத்தியிலும் மூன்று பிள்ளைகள் கணவனுடன்
மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தேன்  ஆரம்ப நாட்களில் பின்னர்- திடீரென
யுத்தம் தலைதூக்கியது வீட்டிற்கு ஒருவன் போராட வேண்டும் என பலர்
பதினேழு வயதுடைய  என் ஆண் மகனை போராட கூட்டிச் செல்ல வந்தார்கள்
எவ்வளவோ நான் போராடியும் விடாமல் என் பிள்ளையை கொண்டு சென்று விட்டார்கள்
போர் உக்கிரமடைந்ததால் பல இடங்களிலும் இடம் பெயர்ந்து சென்றோம்
ஏன் குடும்பம் பசியால் துடித்தது எங்கோ ஓர் இடத்தில் கஞ்சி கொடுப்பதாக அறிந்த
 கணவன கஞ்சி வாங்கி வருவதாக காலை ஆறு மணிககு புறப்பட்டான் - ஆனால்
மாலை ஆறு மணியாகியும் அவர் வீடுவரவில்லையே என பதறி அடித்து கொண்டு
ஓடினேன் அவ்விடம அங்கே; கொடிய அரக்கன் வீசிய செல் உடலை துளைத்தது
இரத்த வெள்ளத்தில் உயிர் நாடிகள் அசைவற்று கிடந்தான் என் மன்னவன்
கதறினேன் அழுது புரண்டேன் ஆனால் என்னருகில் எவரும் வரவில்லை

சிலர் இராணுவம் இவ்விடத்திற்குள் வந்து விட்டார்கள் என்று கூறிக்கொண்டு ஓடுகிறார்கள்
கணவனின் உடலைஅவ்விடத்திலே விட்டு விட்டு என் பிள்ளைகளை நோக்கி ஓடினேன்
அங்கே ஆறு வயதுடைய என் மகள் அழுது கொண்டு நின்றால் எங்கே அண்ணன் என்றேன்
அவளோ துப்பாக்கியுடன் வந்த ஜவர் அண்ணனை பிடித்து சென்று விட்டார்கள் என்றாள்
நாட்டிற்காக போரட சென்ற மகனும் இராணுவம் பிடித்த என் மகனும் திரும்ப வருவார்கள்
என்ற ஏக்கத்துடன் என் மகளுடன் முகாமில் பல இன்னல்களுக்குள்  வாழ்ந்தேன்
ஓர் நாள் போராட சென்ற என் மகன் முள்ளிவாய்க்காளிலே இறந்து விட்டதாககூறினார் ஒருவர்
அழுது கொண்டு இருந்த போது சிலர் காணாமல் போனோர் தொடர்பாகவிபரம் எடுப்பதாக கூறினார்கள்
உடனே என் அழுகையை நிறுத்தி விட்டு அவ்விடம் சென்று இராணுவம் பிடித்து சென்றவன்
தொடர்பாக பதிவுகளை மேற் கொண்டேன் அவனாவது என்னிடம் வருவான் என்ற ஏக்கத்துடன்

பின்னர் முகாமை விட்டு என் சொந்த இடம் சென்றேன் அங்கு என் வீடு இருந்ததுக்கான
எவ் டையாளங்களுமின்றி நிலம் வெறித்தோடிப்போய் பாலைவனமாக காட்சி தந்தது
அங்கே சிறு குடிசை அமைத்து நானும் என் மகளும் வாழ்ந்து வருகிறோம்
ஊடகங்கள் பல என்னிடம் வந்து பேட்டிகள் எடுத்து செல்கின்றனகாணாமல் போனோர் தொடர்பாக
சிலர் தமிழ் தேசியம் பேசிக் கொண்டு வருகிறார்கள் என்னிடம் ஜெனீவாவிலிருந்து வருகிறார்கள்
நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வாங்கோ உங்கள் மகன் தொடர்பாக கதையுங்கள் என்பார்கள்
வந்தவர்கள் போய்விட்டால் இவர்கள் என் வீட்டு வாசல் கூட வர மாட்டார்கள்
இவர்கள் எல்லோருக்கும் என் வேதனைகள் செய்தியாகமட்டும் தெரிகின்றது போல
நாட்கள் பல நகர்ந்து செல்கின்றனஆனால் காணாமல் போன என் மகனோ இன்று வரை வரவில்லை
ஏறாத கோவில் படிகள் எல்லாம் ஏறி பிராத்திக்கிறேன் ஆனால் சாமிக்கோ
இந்த ஏழையின் வேண்டுதல்கள் ஒன்றும் கேட்கவில்லை போல் 

இத்தனை வலிகளோடும் நானும் என் பெண்ணும் வாழ எத்தனிக்கின்ற போது
கூலி வேலைக்கு சென்றேன் ஒரு நேர சாப்பட்டிற்காவது பணம் கிடைக்கும் என்று
அங்கே நான் பெண் என்றதால் எனக்கு கூலி குறைவாகக தருகிறான் என் முதலாளி
திருமண வைபவம் ஒன்றிற்கு சென்றேன் அங்கே விதவை என்ற பட்டம் என் மேல் 
சமூகம் சுமத்தி அவ் நிகழ்விலிருந்து புறந்கள்ளுகின்றது
ஆண் நண்பர்கள் பலர் என் வீட்டிற்கு வந்து கதைத்து சென்ற போது 
ஏன்னை சுற்றியிருப்பவர்களோ என்னைவிபச்சாரி என்றுவிளம்பரப்படுத்துகிறார்கள்
தனியே நான் வெளியே செல்லும் போது இராணுவம் முதல் என் சமூக ஆண்கள் வரை
என் முதலாளி வரை பலர் எனக்கு பாலியல் அச்சுறுத்தல்கள் தருகிறார்கள்
தனியே வீட்டிலிருக்கும் என் 10 வயது சிறுமியை கூட காம வேட்கை கொண்ட ஆண்கள் 
என்ன பன்னுவார்களோ என்ற ஏக்கத்துடன்
வேலைக்கு செல்கிறேன்;ஒவ்வொரு நாட்களும்

வீதியில் தெரிந்த ஆண்களுடன் நின்று கதைத்தால் என்னை வேசை என்கிறார்கள்
என் பிள்ளைகள் கணவன் சொத்து இழந்தும் உயிருடன் இருக்கும் பிள்ளைக்காக
வாழ வேண்டும் என்று நான முயற்சித்த போது இவ் ஆணாதிக்கசமூகம் 
நான் பெண் என்றதால் என்னை ஒடுக்குகின்றது பல வழிகளிலும்;
எல்லேரரும் சர்வதேச பெண்கள் தினத்தைகொண்டாடுகிறார்கள்.- ஆனால்
எங்கே ஓர் பெண்ணிற்குமுழு விடுதலை கிடைத்தது இவ் ஆணாதிக்க சமூகத்திலிருந்து??


No comments:

Post a Comment