சமூகமும் பெண்களும்



சமூகமும் பெண்களும்

இன்றைய கால கட்டங்களில் பெண்களுக்கு விடுதலை என்று குரலெழுப்புவர்களின் தொகை அதிகரித்துக் கொண்டு செல்கிறதே தவிர எதற்கு எதிலிருந்து விடுதலை என்பது மக்கள் மத்தியில் சரியாக  எடுத்துக் கூறப்படவில்லை. நாம் வாழும் இச் சமூகம் அநீதியானது என்பதை நாம் ஏற்றுக் கொண்டு அந்த அநீதிகளினை ஆராய்ந்து அதை ஒழிப்பதன் மூலம் தான் நாம் விடுதலை அடைய முடியும். இவ் அநீதிகள் எவையும் எம் மீது பொறிக்கப்பட்டவையல்ல வரலாற்று ரீதியாக ஏற்பட்ட பொருளாதார கலாச்சார அரசியல் சமூக மாற்றங்களின் விளைவே. பெண்கள் ஆண்களினை போன்று கல்வி பயில்கிறார்கள் வேலை செய்கிறார்கள் இதை விட என்ன வேண்டும் என்ன விடுதலை வேண்டும் என்று கூறுபவர்களும் உண்டு.
எமது சமூக அமைப்பில் குடும்பம் முக்கிய பங்கு வகிக்கின்றது இக் குடும்பங்களில் நிலவும் பாகுபாடுகளும் பிற்போக்குதனமான கருத்துக்களுமே ஒரு பெண் தன்னிச்சையாக நம்பிக்கையோடு செயற்படுவதை தடுக்கின்றது. பெண்ணாணவள் பிறந்தத முதல் இறப்பு வரை தந்தை அண்ணண் கணவன் என்று யாரையாவது சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். இதனால் பெண் தனித்து வாழும் தன்மையை இழந்து கொள்கிறாள். எமது சமூகத்தில் பெண்களாக பிறப்பதே ஒரு சாபக்கேடாக நோக்கப்படுகிறது. சுhதாரண விளையாட்டு பொருட்களில் கூட பாகு பாடு காட்டப்படுகிறது ஆண் பிள்ளைகளுக்கு துப்பாக்கி கார் போன்ற பொருட்களினையும் பெண் பிள்ளைகளுக்கு பொம்மை சட்டி பானை போன்ற பொருட்களினை; வாங்கி கொடுக்கிறார்கள். உணவு விடையத்தில் கூட பெண்களுக்கு வீட்டில் அடக்கு முறை காணப்படுகின்றது அதாவது வீட்டிலுள்ள ஆண்கள் உண்ட பின்னே பெண்கள் உண்ண வேண்டும் என்னும் நிலை காணப்படுகின்றது.
ஒரு பெண்ணாணவள் எப்பவும் ஒரு ஆணுக்கு அடங்கி தான் வாழ வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. ஆண் என்பவன் எதை சொன்னாலும் பெண் என்பவள் எதிர்த்து கதைக்காமல் அதற்கு கீழ் படிந்து வாழ்ந்தால் தான் அவள் ஒரு நல்ல பெண் என எமது சமூகம் நோக்குகின்றது. அப் பெண் அவர்கள் கூறுவதற்கு எதிர்த்து கதைத்தாள் அவளை சரியில்லா பெண்ணாக எமது சமூகம் நோக்குகின்றது. காதல் செய்யும் உரிமை ஆண் பெண் அருவருக்குமே காணப்படுகின்றது ஆனால் குடும்பங்கள் பல இவ் உரிமையை பெண்ணுக்கு கொடுக்க மறுக்கின்றது. திருமணம் என்பது சில பெண்களுக்கு ஒரு அடக்கு முறையிலிருந்து இன்னோர் அடக்க முறைக்கு செல்லும் ஓர் வாயிலாகவே விளங்குகின்றது. மற்றும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்பவை பெண்களுக்கு இருப்பது தான் அழகு என்று எமது சமூகம் பெண்களினை அடக்கிவைக்க கூறுகின்றது பெண் என்பவள் எப்பவும் சத்தமாக கதைக்க கூடாது சிரிக்க கூடாது பொம்பில சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்னும் பழமொழியும் பெண்களினை அடக்கும் நோக்கோடு கூறப்படுகிறது வெளியில் ஆண் துணை இன்றி திரியக் கூடாது எப்பவும் ஓர் ஆணையே சார்ந்து வாழ வேண்டும் என்று எமது சமூகம் எதிர் பார்க்கின்றது.
பெண்களின் திறமைகளுக்கு முற்றப் புள்ளி வைக்கும் ஒரு தளமாகவே இன்று அதிகமான திருமணங்கள் காணப்படுபின்றது. இன்றைய பொருளாதார அமைப்பு முறை பெண்கள் தொழிலுக்கு செல்வதை கட்டாயப்படத்தி இருக்கின்ற போதும் ஊதியம் பெறும் தொழிலை கவணிப்பதோடு ஊதியம் பெறாத வீட்டு தொழிலையும் அவளே சுமக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. மற்றும் பெண்ணின் வாழ்க்கையானது கணவன் இறப்பதுடனே முடிகிறது. வுpவாகரத்து மறுமணம் என்பன சட்ட ரீதியாக கொடுக்கப்பட்ட போதும் சமூக ரீதியாக ஏற்றுக் கொள்வது அரிதாகவே காணப்படுகின்றது. மற்றும் பாலியல் வன் முறை பெண்கள் குடம்பத்தில் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது விரும்பியோ விரும்பாமலோ பெண் ஆனவல் தனது கணவனின் ஆசைகளுக்கு இனங்க வேண்டிய சமூக சூழல் காணப்படுகின்றது ஆண் என்ன பிழை செய்தாலும் அவனை ஏற்று பெண்ணாணவள் வாழவேண்டும் என எமது சமூகம் எதிர் பார்க்கிறது அவ்வாறு அவள் வாழா விடின் அவள் மீது தேவையில்லா குற்றங்களை சமூகம் சுமத்துகின்றது.
இவ்வாறு எமது சமூகத்திலுள்ள பல பெண்கள் பல்வேறு பட்ட ஒடுக்கு முறைகளுக்குள் தள்ளப்படுகிறார்கள். எனவே இவ் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக கிளர்ந்து நாம் எமது உரிமைகளினை பெற்று யாரையும் சார்ந்து வாழாது சுயமாக சிந்தித்து எமக்குள் ஒரு தன்னம்பிக்கையினை வளர்த்து நாம் ஓர் முழுமையான விடுதலை அடைவதன் மூலம் தான் சமூகமும் விடுதலையை பெற முடியும்.

அகல்யா. பிரான்சிஸ்கிளைம்

No comments:

Post a Comment