கடலின் மத்தியில் ஓர் கிராமம் - அனலைதீவு


கடலின் மத்தியில் ஓர் கிராமம் - அனலைதீவு

அகல்யா பிரான்சிஸ்கிளைன் அகிலன் கதிர்காமர்

யாழ் நகரிலிருந்து அனலை தீவிற்கு புறப்படுவோமாயின் ஊர்காவற்துறைக்கு ஒரு மணித்தியாலம் பஸ்சில் பயணித்து பின் 45 நிமிடங்கள் தனியார் படகில் 50ரூபா பற்று சீட்டுடன் ஏறினால் அங்கு ஆசிரியர்கள்இ அரசாங்க ஊழியர்கள்இ பெற்றோருடன் பிள்ளைகள்இ மூட்டைகளுடன் வர்த்தகர்கள் மற்றும் படகின் மேல் மோட்டார் சைக்கில்களும் லீசிங் வர்த்தகர்களின் பொருட்களும் காணலாம். அவ்வாறே கடலில் பயணிக்கும் போது சிறு சிறு அலைகள் படகினை மெல்ல மோதி படகு ஆடி ஆடி நகர சிறு தீவுகளின் அழகான காட்சிகளை அனுபவிக்கலம். இவ் அழகினை ரசித்தபடி ஜெட்டியை அடைந்தால் அங்கு ஓர் பஸ்சும் பல ஆட்டோக்களும் தீவின் உள் போக்கு வரத்திற்காக காத்திருக்கும்.
புவியியல் ரீதியாக யாழ்ப்பாண மாவட்டத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் தீவுகளில் மிக கூடிய தூரத்திலிருக்கின்றது நெடுந்தீவு அதற்கடுத்ததாக நையினாதீவும் அனலைதீவும் காணப்படுகின்றது. தீவுகளில் விவசாயம் செய்வதற்கு நன்னீர் கிடைப்பது மிகவும் அருமையாக இருந்த போதும் அனலைதீவில் விவசாயத்திற்கு ஏற்ற மண் மற்றும் நீர் வளங்கள் போதியளவு இருக்கின்றது. கடற்தொழில்இ விவசாயம் என வடமாகாணத்தின் இரு முக்கிய பொருளாதார துறைகளும்; அனலைதீவில் இயங்குகின்றது. பனைவளங்கள் மிகுந்த இந்த தீவல் பனை மூலப்பொருட்கள் சம்மந்தப்பட்ட தொழில்களை செய்வோரும் வசித்து வருகின்றனர்.
கடற்தொழிலும் விவசாயமும்
இந்தியா மாநிலத்திற்கு அண்மையிலலிருக்கும் தீவுப்பகுதிகளில்  ஒன்றான அனலைதீவும் இந்தியா இழுவைப்படகுகளின் அத்து மீறல்களால் அதீத பாதிப்பை அடைந்துள்ளது. கடல் வளங்கள் அழிந்ததன் காரணமாக மீனின் உற்பத்தி குறைந்துள்ளது. இழுவைப்படகுகள் வரும் நாட்களில் கடலிற்கு போகாமல் இருப்பதனால் இக்கிராமத்தினுடைய தொழிலாளர்களின் வருமானம்; பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தல் இவர்களுக்கு பாரிய பிரச்சனை. உள்ள10ரில் மாத்திரமே சந்தைப்படுத்த முடிகின்றது. வேறு இடங்களுக்கு விநியோகிப்பதாயின்இ  படகுகளிலே 11 மணிக்கு பின்னர் யாழ் கொட்டடி சந்தைக்கு கொண்டு செல்கின்றார்கள் அதற்குள் மீன்கள் பழுதடைந்து விடலாம். ஏனெனில் மீன்களை சேமித்து வைக்க குளிரூட்டிவசதிகள் தேவைப்படுகின்றன்.
வடமாகாணத்தின் விவசாயிகள் காலநிலை வரட்சி காரணமாக அறுபடையினை பெறமுடியாது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளார்கள். இத் தீவு மக்களும் மழை மற்றும் கிணற்றினை நம்பி விவசாயம் செய்வதனால் இதே பிரச்சனையை சந்திக்கின்றார்கள். இங்கு புகையிலை வெங்காயம் மிளகாய் நெல் போன்ற பயிர்கள் ஒரு போகம் மாத்திரம் செய்யப்படுகின்றன. 1960வதுகளில் சின்ன சிங்கப்பூர் என இக்கிராமத்தினை அழைக்கும் அளவில் விவசாயம் மிகவும் சிறபுற்று பொருளாதார முன்னேற்றத்தினை அடைந்திருந்தது.  தென் இலங்கைக்கு கூட பணப்பயிர்களை இங்கிருந்து ஏற்றுமதி செய்தார்கள். ஆனால் இன்று அறுபடை பெற முடியாது பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கின்றார்கள்.
சமூக பொருளாதார சவால்கள்
பெண்களின் நிலையினை நோக்குகையில் இவர்களில் சிலர் கூலிவேலைக்கு செல்கின்றார்கள். சில பெண்கள் தையல் பனைவேலைகள் என பல வேலைகள் பழகியுள்ள்ள போதும் இவ் வேலைகளை முன்னெடுக்க உள்கட்டுமான வசதிகள் குறைவாக இருக்கின்றன. ஒரு சில பெண்கள் வீட்டில் வைத்து தையல் தொழிலை புரிகிறார்கள் மற்றும் சிலர்  வலைகளை தைக்கின்றார்கள்.
இத்தீவின் மூன்று பாடசலைகளில் இரண்டு பாடசாலைகள் தரம் 1-5 வரையானவை மற்ற பாடசாலை தரம் 6-13வரை காணப்படுகின்றது கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னரே தரம்13 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் கலைப்பிரிவு மாத்திரமே தற்போது கற்பிக்கப்பட்டுகின்றது. ஏனைய துறையினை பயில்கின்ற மாணவர்கள் ஊர்காவற்துறைக்கு செல்ல வேண்டியுள்ளது. தரம் 11 6வருடங்களுககு முன்; ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பாடசாலைகளுக்கு வேறு இடங்களிலிருந்து ஆசிரியர்கள் பணியாற்றுகின்ற போது போக்குவரத்து பிரச்சனையை எதிர் கொள்வதால் பொரும்பாலான ஆசிரியர்கள் இங்கு சென்று கல்வி கற்பிப்பதனை விரும்புவதில்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் ஏதும் இல்லாததால் பிள்ளைகளை பகுதி நேர வகுப்பிற்கு அனுப்ப முடியவில்லை என இக் கிராமத்தவர்கள் கூறுகிறார்கள். உயர் கல்வியினை பயில ஊர்காவற்துறைக்கு செல்ல வேண்டியிருப்பதால் பாடசாலையிலிருந்து சில மாணவர்கள் இடைவிலகி கொள்கிறார்கள்.
இங்கிருக்கும்  வைத்தியசாலையில் அதிக வசதி வாய்ப்புக்கள் இல்லை. கர்ப்பிணிதாய்மார் மற்றும் சிறுபிள்ளைகளுக்கு மாதாந்தம் போடும் ஊசிகளுக்கு ஊர்காவற்துறைக்கு செல்ல வேண்டியிருக்கின்றது. வைத்தியர்கள் இங்கு திங்கள் முதல் வெள்ளி வரை பணி புரிகின்றனர். சனிஇ ஞாயிறுகளில் நோய்வாய் படில் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையிலுள்ளார்கள். இரவு நேரத்தில் அவசர சிகிச்சை பிரசவம் போன்றவற்றிற்கு செல்வதாயின் தனியார்படகு அல்லது நேவியின் உதவியுடனே ஊர்காவற்துறை வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது தனியார் படகுகளில் செல்வதாயின் 2500ரூபா.
இங்கு கொண்டுவரப்படும் பொருட்கள் யாழ் நகரிலிருந்து தனியார் படகுகளில் வருவதனால் பொருட்களின் விலை 30 வீதம் அதிகமாகும். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களினை யாழில் விற்பனை செய்வதற்கு போக்குவரத்து செலவுகள் பெரும் சவாலாக அமைகின்றது. மற்றும் மின்சார வசதிகள் சில இடங்களில் மாத்திரம் விஸ்திரிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு மொத்தமாக வடமாகாணத்தின் வேறு கிராமங்களின் உட்கட்டுமானங்களிலும் பார்க்க இத்தீவில் போக்குவரத்து வசதிகள் பெரியதொரு பிரச்சனையாகவுள்ளது. ஆனால் அனலைதீவில்; வங்கிகள் இல்லாவிட்டாலும் வடமாகாணத்தின் அண்மைக்கால நிதிமயமாக்கலின் தாக்கம் இங்குள்ளது. வங்கிகளிடமிருந்து கடன்இ நகையடைவுஇ பெண்கள் மத்தியிலான சிக்கன கடன் மற்றும் லீசிங் நுகர்வுகளினால் கடன்களில் மக்கள் மூழ்கியிருக்கின்றார்கள்.
இக்கிராமத்தில் பொலிஸ் இல்லை. சில சமூக வன்முறைகள் பிரச்சனைகள் தோன்றும் போது கிராமசேவகரே அதை தீர்த்து வைக்க வேண்டிய நிலமையிலுள்ளார். ஆனால் யுத்தகாலத்திலிருந்து இன்று வரை நேவியின் அழுத்தங்கள் இக் கிராமத்திலிருப்பதாக கூறப்படுகின்றது. மற்றும்  இங்கு பல நோக்கு கூட்டுறவு சங்கம் இயங்குகின்றதுஇ ஆனால் அதனுடைய செயற்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றது.
கடந்த தசாப்தங்களாக பேரின் பாதிப்பு உட்கட்டுமானஇ பிரச்சனைகள்இ இடப்பெயர்வு  மற்றும் புலப்பெயர்வுகளால் அனலைதீவினுடைய சனத்தொகை 3000குடும்பங்களிலிருந்து தற்போது 600குடும்பங்களாக குறைந்துள்ளது. இவ்வாறு  வடமாகாணத்தில் பல விளிம்;புநிலை கிராமங்கள் இருந்த போதும் அனலைதீவு புவியியல் ரீதியாகவும்இ புலப்பெயர்வுஇ இடப்பெயர்வுஇ பொருட்களின் விலை; போன்ற காரணங்களினால்; மிகவும் பின்னோக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கிராமப்புற வாழ்க்கையை மேம்படுத்தல்
இலங்கையில் அண்மைக்காலத்தில் நகரமயமாக்கல் மற்றும் நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்தே வருகின்றது. இந்நிலையில் கிராமப்புற வாழ்கையின் எதிர்காலம் மற்றும் உள்ளாற்றல் என்னவென்ற கேள்வி எழும்புகின்றன.
அனலைதீவு போன்று புவியியல் மற்றும் சமூகரீதியாக விளிம்பு நிலையில்லிருக்கும் கிராமத்தின் மேம்பாடு தற்போது அவசியமாக விவாதிக்கப்பட வேண்டும். ஏனெனில் நகரத்திற்கு செல்வோரில் ஒரு சிலருக்கு தான் அங்கு வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றது. மற்றும் கிராமங்களில் மிஞ்சியிருப்போர் சமூக புறந்தள்ளல்களினால்; ஒதுக்கப்படாமல் அவர்களுடைய சமூக பொருளாதார வளர்ச்சிக்கான தீர்வுகளை தமிழ் புத்திஜீவிகளஇ; வடமாகாணசபை மற்றும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இந்த கட்டத்தில் அனலைதீவிற்கு மேற்குறித்தவாறு பலவிதமான உட்கட்டுமானங்கள் மற்றும் அரசசேவைகள் தேவைப்படுகின்றன. இதற்குள் கல்விஇ சுகாதாரம்இ பாதுகாப்புஇ போக்குவரத்து போன்ற உட்கட்டுமான தேவைகள் குறிப்பிடத்தக்கவை. ஆனால் இதற்கு மேலாக இத் தீவினை மேம்படுத்துவதற்கு உள்ளுர் வாய்ப்புக்களுமே மிக முக்கியமான சவாலாக அமைகின்றன. இங்கு கடற்தொழில் விவசாயம் மற்றும் பனைவேலைகள் அத்துடன் பெண்களுடைய வேலைவாய்ப்புகளுக்கு அரசாங்க முதலீடுகள் தேவையாக இருக்கின்றது. கடற்தொழிலை பொறுத்தவரையில் இந்திய இழுவைப்படகு பிரச்சனையை தீர்ப்பது அவசியம். விவசாயத்தின் வளர்ச்சிக்கு மாற்று பயிர்களஇ; நெல்லின் உற்பத்தி போன்ற முயற்சிகளுக்கு உதவிகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றது. அத்துடன் பனைஉற்பத்தி மற்றும் பெண்களின் தையல் வேலைகளுக்கு கைத் தொழில் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
இத்தீவின் முக்கியத்தவர்கள் கூறுகையிலஇ; போக்குவரத்து உட்கட்டுமானங்கள; விவசாயத்திற்கான இயந்திரங்கள் மற்றும் உற்பத்திக்கான மில் என்பன இந்த தீவின் பொருளாதாரத்தை வளர்க்க உதவும் என்கின்றார்கள். சமூக பொருளாதார வளர்ச்சியை அணுகும் போது ஒரு கிராமத்தின் மக்களுடைய கூட்டு செயற்பாட்டு அபிவிருத்தியை சாத்தியமாக்கும். இங்கு ஏற்கனவே இயங்கி வரும் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தை பலப்படுத்துதல்இ மேல் வசதிகளை கூட்டுறவினூடாக இயங்க வைத்தல் மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை அரசாங்கதுறை அல்லது கூட்டுறவு முயற்சியினால் முன்னெடுப்பதன் ஊடாக உற்பத்தி மற்றும் விநியோகித்தலில் அந்ந சமூகத்திற்கு பல முன்னேற்றங்கள் வரலாம். இவ்வாறான கிராமப்புற மேம்பாட்டினை வடமாகாண சபை முக்கியப்படுத்தல் அவசியமாகும்.

No comments:

Post a Comment